பின்பற்றுபவர்கள்

சனி, 22 ஜனவரி, 2011

அன்னை மடி மெத்தையடி/ அத்தை மடி மெத்தையடி

தாலாட்டு பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல் மிக முக்கியமானது. நல்ல இசையமைப்பும் P. சுசீலா அம்மாவின் அழகான குரலும் தனி இன்பம். அதுவும் சுவை மாறாமல் இரண்டு வகையில் பாடல்களைப் பதிவாக்கி இருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டு பாடல்களையும் தரமேற்றி இருக்கிறேன். சுவையுங்கள்.திரைப் படம்: கற்பகம் (1963)
நடிப்பு: ஜெமினி, முத்துராமன், சாவித்திரி, K R விஜயா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்


லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ
அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அன்னை மடி மெத்தையடீ

லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ
வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்
வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்

தந்தால் என்னுயிர் தந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன்

ம் அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அன்னை மடி மெத்தையடி
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ
ஓ ஓ ஓ ஆரோ
ஓ ஓ ஓ ஆரோ

அத்தை மடி மெத்தையடி

http://www.divshare.com/download/13839303-43a

லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ

லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்

ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேரோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

ம் ம் ம் அத்தை மடி மெத்தையடி...
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ.

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

முதலாவது இப்பொழுது தான் கேட்கிறேன். இனிமையான பாடல்கள்.
நன்றி.

கருத்துரையிடுக