பின்பற்றுபவர்கள்

சனி, 1 மார்ச், 2014

தண்ணீரிலே மீன் அழுதால்

மீண்டும் இன்று டி ராஜேந்தரின் இனிய பாடல் ஒன்று. இசை, பாடல் வரிகள், குரல் என எல்லா விதத்திலும் ஒரு சிறந்த பாடல் என்பேன். small and sweet என்பார்கள்.
ராஜேந்தரின் நடித்து பாடிய முதல் பாடல்  என நினைக்கிறேன்.

திரைப்படம்: மைதிலி என்னைக் காதலி (1986)
இயக்கம், இசை, பாடல்: டி.ராஜேந்தர் 
பாடியவர்: எஸ் பி பி.
நடிப்பு:  டி.ராஜேந்தர், அமலா.

  http://asoktamil.opendrive.com/files/Nl8zMzE4Mjg3N19QbDRDQl9mOWYz/Thanneerile%20Meen%20Azuthal.mp3


தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்

முள் மீது விழுந்தபடி
முகாரி பாடும் கிளி
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ
முள் மீது விழுந்தபடி
முகாரி பாடும் கிளி

கண் துடைப்பார் இல்லை
கை கொடுப்பார் இல்லை
கண் துடைப்பார் இல்லை
கை கொடுப்பார் இல்லை

உன்னை புரிந்தோரில்லை
உள்ளம் அறிந்தோரில்லை

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்

மனமே மனமே மனமே மனமே

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கருத்துள்ள அருமையான பாட்டு...

SANKAR சொன்னது…

யார் கண்ணன் இயக்கத்தில் வந்த "வடிவங்கள்" படத்தில் இடம் பெற்ற "தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை கண்டது யார் தனியாக நீ அழுதால் உன்னோடு அழுவது யார் யார் "என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.-சங்கர் திருநெல்வேலி (இந்த பாடலையும் இணைக்கவும் )

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_10.html?showComment=1399677140300#c8026519943068079763

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் சொன்னது…

அருமையான பாட்டு பாடல்பகிர்வுக்கு நன்றி§ இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக