பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 4 மார்ச், 2014

குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க

இனிமையான தமிழ்ப் பாடல். நல்ல இசை, குரல் பாடல் வரிகள்.


திரைப் படம்: பச்சை விளக்கு (1964)
பாடியவர்கள்: டி.எம்.எஸ் - P.சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி
இயக்கம்:   A பீம்சிங்


http://asoktamil.opendrive.com/files/Nl8zMjk0MjUzN19Hc2s2cl9kZmI5/vaarathiruppaalo%20vanna%20malar.mp3


குத்து விளக்கெரிய
கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

கண்ணழகு பார்த்திருந்து
காலமெல்லாம் காத்திருந்து
பெண்ணழகை ரசிப்பதற்கு
பேதை நெஞ்சம் துடி துடிக்க
பேதை நெஞ்சம் துடி துடிக்க

வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள்
சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை

பக்கத்தில் பழமிருக்க
பாலோடு தேனிருக்க
உண்ணாமல் தனிமையிலே
உட்கார்ந்த மன்னனவன்
உட்கார்ந்த மன்னனவன்

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

கல்வி என்று பள்ளியிலே
கற்று வந்த காதல் மகள்
காதலென்னும் பள்ளியிலே
கதை படிக்க வருவாளோ
கதை படிக்க வருவாளோ

வாராதிருப்பாளோ வண்ண
மலர் கன்னி அவள்
சேராதிருப்பாளோ
தென்னவனாம் மன்னவனை

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக