பின்பற்றுபவர்கள்

வியாழன், 6 மார்ச், 2014

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்

இளம் ஜோடிகளின் கொண்டாட்டம். வாசுவின் கணீர் குரலில் இளமை ஊஞ்சலாடும் ஒரு பாடல்.

திரைப்படம்: சரணாலயம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
இசை : M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
இயக்கம்: R சுந்தர்ராஜன்
நடிப்பு: மோகன், நளினி

http://asoktamil.opendrive.com/files/Nl8zMzQzMDA0Nl9YaUI5VF8zZmY4/Indru%20Kaatrukkum-Saranalayam.mp3
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்
நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

பாக்கு மரங்களின் நிழலோரம்
நல்ல பவள மல்லிகைகள் பாய் போட

அஹா ஆ ஓஹ் ஓஹ் ஓஹ்

பாக்கு மரங்களின் நிழலோரம்
நல்ல பவள மல்லிகைகள் பாய் போட

மாலை பொழுதோடு பனி தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
மாலை பொழுதோடு பனி தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
ரதிமாறன் விளையாட்டு அரங்கேற

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

சோலை வனங்களின் வழிதோரும்
சின்னஞ்சிறிய மின்மினிகள் விளக்கேற்ற

அஹா ஆ ஹே ஹே ஹே

போதை மெதுவாக தலைக்கேற
மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற
வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்
 இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாலி அவர்களின் வரிகளில் பாடல் அருமை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

நன்றி ஐயா...

Unknown சொன்னது…

நன்றிகள் பல தனபாலன் சார்,
உங்களின் இந்த பதிவை முன்னரே Book mark செய்து வைத்திருக்கிறேன். இப்போது ஒரு குறுகிய மலேஷிய பயணத்தில் மும்மூரமாக இருப்பதால் திரும்பி வந்த பின்புதான் இதை செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் உதவிகளையும் எதிர்ப்பார்க்கிறேன்.

கருத்துரையிடுக