பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 9 மார்ச், 2014

joyful singapore colorful malasiya

நான் பிறந்து வளர்ந்த  மலேசியாவிற்கு நீண்ட காலம் கழித்து எனது உறவினர் ஒருவரை பார்க்க தோஹாவிலிருந்து மிக மிக குறுகிய லீவில் (4 நாட்கள்) வந்தேன். இன்றைய காட்சிகளும் பழைய நினைவுகளும் மறக்கமுடியாதவை. உண்மையாகவே colorful malasiya தான் இன்னமும்.

திரைப்படம்: வருவான் வடிவேலன் (1978)
இயக்கம்: கே சங்கர்
இசை: M S விஸ்வநாதன்
நடிப்பு: விஜயகுமார், லதா, K R விஜயா
பாடல்: கண்ணதாசன்


http://asoktamil.opendrive.com/files/Nl8zMTA5MTM5OV9uTGRCdl9iODNl/Joyfull%20Singapore%20ஜாய்ஃபுல்%20சிங்கப்பூர்.mp3

joyful singapore singapore singapore
colorful malasiya malasiya malasiya

joyful singapore colorful malasiya

joyful singapore colorful malasiya

ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் 
அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள் 

ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் 
அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள் 

சீனக்கிளி போல் சிரிக்கும் அழகை 
காணக் கண்கோடி இப்போது தேவை 

நீலக்கடல் போல மிதக்கும் விழியில் 
காதல் கவிபாட வந்தாள் உன் பாவை 


joyful singapore 

colorful malasiya

ர ர ர ர ப ப ப ப

ர ர ர ல ல ல ர ர ர

திருந்திய பூங்காவைப் போலே
அடி திருமகள் உன் கூந்தல் மேலே
ஒரு மலர் நான் சூட வேண்டும்
இன்னொரு மலர் நீயாக வேண்டும்

அரும்பிய குளிர் காற்று மோதும்
அரும்பிய குளிர் காற்று மோதும்
என் அழகிய இளமேனி வாடும்
கரும்பென இதழ் தந்த சாறும்
என் கரை மீறும் ஆசையைத் தூண்டும்

joyful singapore 

colorful malasiya

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா 

மரத்திலும் பெண் போன்ற குணங்கள்
அதன் மடியிலும் பாலூறும் இடங்கள் 

நிழலுக்கு சுகமான வனங்கள்
நாம் நெருங்கிட சரியான இடங்கள் 


joyful singapore 
ப ப ப ப ப 

colorful malasiya

ஆடுதொட்டில் மஞ்சம் போடும் 
தண்ணீர் மலையின் பக்கம் வந்து 
ஆடு கண்ணா ஆடு இங்கே 

நாடு விட்டு நாடு வந்து 
காதலிக்கும் இன்ப நிலை 
பாடு கண்ணே பாடு இங்கே 

காமனுடன் போட்டியிட்டு 
கைகலந்து மெய் கலந்து 
காதலிக்கும் ஜோடி இங்கே 

காலமகள் ஆசை கொண்டு 
பூவிரித்த மெத்தைதன்னில் 
சேர்ந்திருக்க வாடி இங்கே 

ஆடுதொட்டில் மஞ்சம் போடும் 
தண்ணீர் மலையின் பக்கம் வந்து 
ஆடு கண்ணா ஆடு இங்கே 
ஆடு கண்ணா ஆடு இங்கே 


joyful singapore 

colorful malasiya

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உற்சாகம் தரும் பாடல்... நன்றி ஐயா...

myspb சொன்னது…

சூப்பர் பாடல் -நன்றி.

கருத்துரையிடுக