பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 ஜூலை, 2015

ஹேய் ஹேய் ஓராயிரம்... hey hey orayiram...

கூகு குக்குக்கு கூகு குக்குக்கு
கிகிகிகி கேகே லிலிலி லேலேலே
என்றெல்லாம் பாடலில் பாதி இடத்தை இது போன்ற வரிகள் ஆக்ரமிக்க ஆரம்பித்த காலம் இளையராஜா காலம்தான். அதற்கு முன் வெகு அபூர்வமாகவே இது போன்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். சுவாராசிமில்லாத பல குட்டி பாடலாசிரியர்களை காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் அனுமதித்தார் இளையராஜா எனலாம். அதுவே வழக்கம் போல பின்னர் நமது திரைபாடல் பாடல் இசை கலாச்சாரம் ஆகிப் போனது.
இவைகளை தள்ளிவிட்டு பார்த்தால் பல பாடல்கள் இளையராஜாவின் இசையாலும், SPB அவர்களின் குரலாலும் நடிகர்களின் திறமையினாலும் சாகாவரம் பெற்றுவிடுகின்றன. அந்த வகையில்தான் இந்தப் பாடலும்..

திரைப்படம் - மீண்டும் கோகிலா (1981)
பாடியவர்கள் - S P B
இசை - இளையராஜா
இயக்கம்: G N ரங்கராஜன்
நடிப்பு: கமல், ஸ்ரீதேவி
பாடல்: பஞ்சு அருணாசலம்
கூகு குக்குக்கு கூகு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண
கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண

விடிகாலையின் பூந்தென்றலில் நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன் 
புதுமையே இயற்கையை ரசிக்காதோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனாதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனாதே வாழ்வில்

இளஞ் ஜோடியின் விழி ஜாடையில் 
பேராசைகள் ஒரு கோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன் 
இளமையே இனிமையை ரசிக்காதோ 
ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

ஹேய் ஹேய் லாலாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக