பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 19 ஜூலை, 2015

என்ன சொல்லி நான் எழுத...enna solli naan ezhutha...


ராணி தேனி திரைப்படம் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் 1982 இல் வெளிவந்திருந்தது. பாடகர் தீபன் சக்ரவர்த்தியை நாயகனாக்கி விஷப்பரீட்சை செய்திருந்த அந்தப்படத்தில் நாயகியாக மகாலஷ்மி நடித்திருப்பார். முன்னர் கல்யாணராமன் என்ற மெகா மசாலா வெற்றியைக் கொடுத்த இயக்குனர் என்ற நன்றிக்கடனுக்காக வை.ஜி.மகேந்திரனுடன் ஒரு துணை நடிகர் லெவலுக்கு கமலஹாசன் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதே நன்றிக்கடனை ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கமல் செய்து கொ(கெ)டுத்தவர்.

"என்ன சொல்லி நான் எழுத, என் மன்னவனின் மனம் குளிர" என்ற அருமையான பாடல் இந்த ராணி தேனி திரைப்படத்தில் இசையரசி பி.சுசீலாவின் குரலில் என்றுமே கேட்பதற்கு இனியதொரு பாடலாக இருக்கின்றது. 
நன்றி:isaiarasi.blogspot.com

படம் : ராணித்தேனீ
இசை : இளையராஜா
பாடியவர் : பி. சுசீலா


என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும் 
வெட்கம் விடுமோ ஹோய்

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

அறியாதவள் நான் தெரியாதவள்
உன் அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே
அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்ல
எப்படி எழுத
ம் ம் ம் ஹூம் ஹூம்
மஹாராஜ ராஜஸ்ரீ

காற்றாகப் போனாலும் 
அவர் கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும் 
அவர் கன்னங்களை நான் தொடுவேன்
பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா
கண்ணா கண்ணா

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

இதயம் துடிக்குது என் செவிக்கே 
கேட்குதம்மா  கேட்குதம்மா
வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா குளறுதம்மா
என்ன செய்ய
என்ன செய்ய
ம் ம் ம் ஹூம் ஹூம்

காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணா
கண்ணா கண்ணா
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக