பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 ஜூன், 2011

வைகைகரை காற்றே நில்லு..

வசன நடையும் கவிதை நடையும் கொண்ட புதிய பாணி திரைப் பாடலாக அமைந்துவிட்ட இந்த பாடல் திரு ஜேசுதாஸ் குரலில் மனதை கிள்ளுகிறது.


திரைப் படம்: உயிருள்ளவரை உஷா (1983)
பாடல்: இயக்கம்: தயாரிப்பு: இசை: நடிப்பு: ராஜேந்தர்http://www.divshare.com/download/14949661-57f

வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கைதனை தேடுதென்று..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கைதனை தேடுதென்று..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

திருகோவில் வாசலது.. திறக்கவில்லை..
தெருக்கோடி பூஜை அது.. நடக்கவில்லை..
தேவதையை காண்பதற்க்கு.. வழியுமில்லை..
தேன்மொழியை கேட்பதற்க்கு.. வகையுமில்லை..
காதலில் வாழ்ந்த.. கன்னி மனம்..
காவலின் வாடையில்.. கன்னி விடும்..
கூண்டுகுள்ளே அலை மோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
கூண்டுகுள்ளே அலை மோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
காதல் கிளி அவள் பாவம்..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

மாக்கோலம் போடுதற்க்கு வரவில்லையே..
அவள் கோலம் பார்ப்பதற்க்கு வழியில்லையே...
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே..
ஜாடை ஒலி சிந்த அவள். இன்று இல்லையே..
நிலவினை மேகம்.. வானில் மறைக்க..
அவளினை யாரோ.. வீட்டில் தடுக்க..
மேகமது விலகாதோ..
சோகமது நீங்காதோ..
மேகமது விலகாதோ..
சோகமது நீங்காதோ..
சோகமது நீங்காதோ..
காற்றே.. பூங்காற்றே
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கைதனை தேடுதென்று..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு


1 கருத்து:

கருத்துரையிடுக