பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 21 ஜூன், 2011

காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

வழக்கமான பின்னனி இசையானாலும் இனிமையான பாடல்தான். பாடலில் கொஞ்சம் மலையாள வாடை வீசினாலும் இனிமையான குரல்.


திரைப்படம்: கவிக்குயில் (1977)
குரல்: சுஜாதா
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு: சிவகுமார், ஸ்ரீ தேவி
இயக்கம்: தேவராஜ் மோகன்http://www.divshare.com/download/15134822-e6d


ம் ம் ம் ம் ம் ம்...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

மனசோலையின் காவியமே...
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ.

மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே........
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

கூந்தலில் வாசனை மலர்கள்.. அவன் சூடும் அழகினிலே..
கூந்தலில் வாசனை மலர்கள்.. அவன் சூடும் அழகினிலே..

என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன.. பொன் மேனி சிலிர்ப்பதென்ன...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நானம் தடுப்பதென்ன....
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..
மனசோலையின் காவியமே...
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ.

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு பிடித்த பாடல். அருமை.

Raashid Ahamed சொன்னது…

சுஜாதாவை தவிர வேறு யார் பாடினாலும் இத்தனை மென்மையாக இருக்குமா என்று தெரியவில்லை.

கருத்துரையிடுக