பின்பற்றுபவர்கள்

சனி, 11 ஜூன், 2011

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..

இன்றும் இளமை மாறாப் பாடல். இசையும் குரலும் பாடல் வரிகளும் அற்புதம்.

திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: P B ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, சிவாஜி, சாவித்திரி, தேவிகா
இயக்கம்: பீம்சிங்http://www.divshare.com/download/15065115-955

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..

பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
ஒ..ஒ..ஒ..ஒ..
பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
கனிகளிலே அவள் மாங்கனி.. கனிகளிலே அவள் மாங்கனி..
காற்றினிலே அவள் தென்றல்..

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..

பால்போல் சிரிப்பதில் பிள்ளை.. அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி..

கண்போல் வளர்ப்பதில் அன்னை.. கண்போல் வளர்ப்பதில் அன்னை..
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை..

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக