பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 26 ஜூன், 2011

தமிழில் அது ஒரு இனிய கலை

நல்ல கவிதைத் தமிழில் மீண்டும் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: சங்கே முழங்கு (1972)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: M G R,லக்ஷ்மி
இயக்கம்: P நீலகண்டன்
http://www.divshare.com/download/15154586-5d5


தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

அழகில் நீயொரு புதிய கலை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை

பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ
பெண்ணாக உருவானதோ

பூ மீது விளையாடும் பொன் வண்டுகள்
உன் கண்ணாக உருவானதோ
கண்ணாக உருவானதோ

அன்னங்கள் தாலாட்டும் கண்ணங்கள்
எனக்காக கல்யாண ஒலி காட்டுவதோ
அன்னங்கள் தாலாட்டும் கண்ணங்கள்
எனக்காக கல்யாண ஒலி காட்டுவதோ

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

ஆ ஹா ஹா...

ஓ ஹோ ஹோ ஹோ...

ஆ ஹா ஹா...

ஓ ஹோ ஹோ ஹோ...

பாராத பார்வைக்குப் பரிசல்லவோ
உந்தன் மார்போடு நான் வந்தது
மார்போடு நான் வந்தது

பால் போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது
நல்ல நாள் பார்த்து நான் வந்தது

நெய்வாசக் குழல்மீது கை போட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ
நெய்வாசக் குழல்மீது கை போட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ

நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ
நீ தந்த விலையல்லவோ

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக