பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 ஜூன், 2011

யாரோ நீ யாரோ.. பேரழகு என்பதுன் பேரோ..

ஆரம்ப காலத்தின் இளமையான குரல்களில் T M Sஉம் P சுசீலாவும் பாடிய ஒரு இனிமை பாடல்.

திரைப் படம்: பிரசிடெண்ட் பஞ்சாசரம் (1959)
இசை: G ராமனாதன்
நடிப்பு: S S R, சரோஜா தேவி
இயக்கம்: A பீம்சிங்கு
பாடல்: கண்ணதாசன்http://www.divshare.com/download/14200691-05a

யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..
செவ்வானும் தேனும் சிறு மீனும் மானும்..
வடிவாகிய பெண்ணோ..
யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..

மானோ செந்தேனோ..
அம் மங்கை ஒவியம் தானோ..
செவ்வாழை போலும் கனி பாவை இங்கே..
வந்ததுவும் வீணோ..
மானோ செந்தேனோ..
அம் மங்கை ஒவியம் தானோ..

மரத்து கொம்பிலே பழுத்த மாங்கனி..
மடியில் வீழ்ந்ததோ இங்கே..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..
மரத்து கொம்பிலே பழுத்த மாங்கனி..
மடியில் வீழ்ந்ததோ இங்கே..
ஒரு வார்த்தை சொன்னவள் எங்கே..
பொன் வண்ண கோவையே அன்ன பாவையே..
மறைந்து நிற்பதேன் அங்கே..
வெளி வந்து காணுவாய் இங்கே..
யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..

மாலை சூடவும் மகிழ்ந்து ஆடவும்..
மங்கை நேரிலே வந்தாள்..
ஆ ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ..
மாலை சூடவும் மகிழ்ந்து ஆடவும்..
மங்கை நேரிலே வந்தாள்..
ஒரு வார்த்தை சொன்னதும் தந்தாள்..
எழில் வண்ண ஓவியம் மங்கை நாதனை..
வாங்கிக் கொண்டதை கண்டாள்..
தான் வந்த பாதையில் சென்றாள்..
மானோ செந்தேனோ..
அம் மங்கை ஒவியம் தானோ..

பேசும் பாவையும் காதல் மீறி நான்..
பெண்மை கொண்டவன் ஆனேன்..
பேராசையாலே அலை மோதும் நெஞ்சில் நான்..
ஆண்மைக் கொண்ட பெண் ஆனேன்..
ஒருவர் மாறினால் உலகம் யாவையும்..
துன்பமாகவே தோன்றும்..

நாம் இருவர் மாறினோம் மனமும் நாடினோம்..
இனியும் வேறெது வேண்டும்..
யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

பிரமாதம். என் அம்மா பாடிக் கேட்டிருக்கிறேன். என்ன படம் என்று தெரியாது. மெட்டு மட்டும் நினைவிருக்கிறது. (இதே மெட்டில் உத்தமபுத்திரன் படத்தில் ஒரு பாடல் வரும் - இன்று நமதுள்ளமே. உங்களிடம் இருக்கிறதா?)

உங்கள் பணி மிகவும் போற்றப்பட வேண்டியது. மிகவும் நன்றி.

கருத்துரையிடுக