பின்பற்றுபவர்கள்

புதன், 15 ஜூன், 2011

இதழில் கதை எழுதும் நேரம் இது...

அழகான கவிதையும் இசையும் குரல்களும் ஒன்றிணைந்தால் நல்ல சிறப்பான பாடல் அமையும் என்பதற்க்கு இந்த பாடல் நல்ல உதாரணம்.


திரைப் படம்: உன்னால் முடியும் தம்பி (1988)
குரல்கள்: S P B, சித்ரா
பாடல்: முத்துலிங்கம்
இசை: இளையராஜா
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: கமல், ஜெமினி, சீதா




http://www.divshare.com/download/15065178-892

இதழில் கதை எழுதும் நேரம் இது..
இதழில் கதை எழுதும் நேரம் இது..
இன்பங்கள் அழைக்குது ஆ.. ஆ ஆ..
..
மனதில் சுகம் மலரும்..
மாலை இது..
மான் விழி மயங்குது ஆ.. ஆ.. ஆ..
மனதில் சுகம் மலரும்..

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே..
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே..
இரு கரம் துடிக்குது..
தனிமையும் நெருங்கிட..
இனிமையும் பிறக்குது..

இதழில் கதை எழுதும் நேரம் இது..

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேச கண்டு..
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்..
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது..
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்..
இனிய பருவமுள்ள இளங்குயிலே..
இனிய பருவமுள்ள இளங்குயிலே..
ஏன் இன்னும் தாமதம் மன்மத காவியம்..
என்னுடன் எழுது..

நானும் எழுதிட இளமையும் துடிக்குது..
நானம் அதை வந்து இடையினில் துடிக்குது..
ஏங்கி தவிக்கையில் நானங்கள் எதுக்கடி..
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி..
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்..
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே..
காலம் என்றைக்கு கனிந்திடுமோ..
காளை மனம் அது வரை பொறுத்திடுமோ..
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்..
தேகம் இது விருந்துகள் படைத்திடும்..

இதழில் கதை எழுதும் நேரம் இது..
இன்பங்கள் அழைக்குது ஆ ஆ ஆ..
மனதில் சுகம் மலரும் ..
மாலை இது..

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்..
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே..
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம்..
தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா..
அழகை சுமந்து வரும் அழகரசி..
அழகை சுமந்து வரும் அழகரசி..

ஆனந்த பூ முகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ..
நாளும் நிலவது தேயுது மறையுது..
நங்கை முகம் என யார் அதை சொன்னது..
மங்கை உன் பதில் மனதினை கவருது..
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது..
காமன் கணைகளை தடுத்திடவே..
காதல் மயில் துணையென வருகிறது..
மையல் தந்திடும் வார்த்தைகளே..
மோகம் என்னும் நெருப்பினை பொழிகிறது..
மோகம் நெருப்பான அதை தீர்க்கும் ஒரு..
ஜீவ நதி அருகினில் இருக்குது..

மனதில் சுகம் மலரும்..
மாலை இது..
மான் விழி மயங்குது ஆ.. ஆ.. ஆ..
இதழில் கதை எழுதும் நேரம் இது..
இன்பங்கள் அழைக்குது ஆ.. ஆ.. ஆ..
இதழில் கதை எழுதும் நேரம் இது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக