பின்பற்றுபவர்கள்

புதன், 6 பிப்ரவரி, 2013

பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா

இரண்டு ஜோடிகளுக்கு மூன்று பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள். பெண்கள் குரலைப் பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். காணொளியில் சின்ன தடுமாற்றம் தெரிகிறது. கவனித்து பார்த்தால் L R ஈஸ்வரி அவர்களின் குரலில் முதலில் ஜெயலலிதா பாடியிருப்பார். பின்னர் P சுசீலா அம்மாவின் குரலுக்கு பாடியிருப்பார். இனிமையானப் பாடல்.

திரைப் படம்: மாட்டுக்கார வேலன்
பாடல்: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
நடிப்பு: எம் ஜி யார், லக்ஷ்மி, ஜெயலலிதா
குரல்கள்: T M S, P சுசீலா, L R ஈஸ்வரி
இயக்கம்: P நீலகண்டன்

http://asoktamil.opendrive.com/files/Nl81Nzg3OTgxX2Y4M2R1XzA4OWI/Poo%20Vaitha%20poovaikku-Maatukkara%20Velan.mp3


பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I love you
I love you
I love love you

பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I love you
I love you
I love love you

முத்துச் சிமிழா
வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா
முத்துச் சிமிழா
வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா
கண் பட்டு
ஆஹா
உங்கள் கை பட்டு
ஓஹோ
இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
கண் பட்டு உங்கள் கை பட்டு
இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
I love you
I love you
I love love you

பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டிப் போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்தப் பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
ஆஹா
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
ஓஹோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்துச் சொல்ல முடியும்
I love you
I love you
I love love you

பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
போடுங்கள்
ஆஹா
கூண்டில் ஏற்றுங்கள்
ஓஹோ
போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
I love you
I love you
I love love you

பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்துக் கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
நன்றாய் இருக்குதிந்த உவமை
ஓஹோ
இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை
ஓஹோஹோ
நன்றாய் இருக்குதிந்த உவமை
இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I love you
I love you
I love love you
I love you
I love you
I love love you

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்...

Unknown சொன்னது…

வாங்க தனபால் சார், ரொம்ப நாளாச்சி!

NAGARAJAN சொன்னது…

வைகை அணைக்கட்டில் எடுக்கப்பட்ட பாடல். ஜிக்ரி தோஸ்த் என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த மாட்டுக்கார வேலன். விறுவிறுப்பான படம்.


தொட்டுக்கொள்ளவா என்ற TMS - PS பாடலும் நன்றாக இருக்கும்.

கருத்துரையிடுக