பின்பற்றுபவர்கள்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஓ ஸ்வர்ண முகி வருவேன் சொன்னபடி

இனிமையானாப் பாடல். இனிமை குறையாமல் பாடியிருக்கிறார்கள். அபூர்வமான பாடல் இது.

திரைப் படம்: கறுப்பு வெள்ளை (1993)
இயக்கம்: மனோபாலா
இசை: தேவா
நடிப்பு: ரஹ்மான், சுகன்யா
பாடியவர்கள்: S P B, K S சித்ரா என நினைக்கிறேன்.

http://asoktamil.opendrive.com/files/Nl81OTU1MzI5X3FHV0NnXzkxZWI/OhhSwarnamugiVaruven-KaruppuVellai.mp3

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
சந்தன பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புது தந்தியிலே
இளம் சுந்தர வீணை ஒன்று
சிந்தட்டும் ராகம் இன்று
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
நந்தா வருக வந்தால் மனதில்
புல்லாங்குழல் ஒலிக்கும்
பிருந்தாவனமும் செந்தேன் குழைத்து
தந்தே எனை மயக்கும்
விழாவொன்று உள்ளம் கூடும்
வேடந்தாங்களிலே
ஆ ஆ ஆ ஆ
உலா வந்த தென்றல் பாடும்
கோடை மூங்கிலிலே
வெண்ணையள்ளும்
சின்னக் கண்ணனை போல்
தினம் என்னை அள்ளு அள்ளு
இன்பத்தின் கீதை சொல்லு
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து
கண்ணே நான் வருவேன்
இங்கே மறந்த இன்பம் இருந்தால்
அங்கே நான் தருவேன்
இதோ இந்த மண்ணும் வின்னும்
பாடும் ராகம் எது
ஓ ஓ ஓ
ஒரே சொல்லில் அர்த்தம் கோடி
காதல் வேதமது
கண்ணும் கண்ணும்
சுகம் பின்னும் பின்னும்
அந்த மன்மத மின்னல் ஒன்றே
பிரம்மனை காயம் பண்ணும்
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
சந்தன பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புது தந்தியிலே
இளம் சுந்தர வீணை ஒன்று
சிந்தட்டும் ராகம் இன்று
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக