இது கொஞ்சம் வில்லங்கமான பாடல்தான் ஆனாலும், SPBயின் குறும்பான குரலுக்கு S. ஜானகி ஈடு கொடுத்து பாடி இருக்கிறார்.
திரைபடம்: சித்திர செவ்வானம் (1979)
நடிப்பு: ஜெய் கணேஷ், ஸ்ரீவித்யா
இயக்கம்: N C சக்கரவர்த்தி
இசை: M S விஸ்வனாதன்
http://www.divshare.com/download/13069962-b50
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...
ஆஆஆஆ தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்...
தாளாதம்மா நாள் முழுதும்...
அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்...
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...ம்..ம்..ம்
கண்டது தானே வெள்ளிப் பூவை கொஞ்சம் பொறுங்களேன்...
கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே...
கண்டது தானே வெள்ளிப் பூவை கொஞ்சம் பொறுங்களேன்...
கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே...
தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி கொதிக்க வைப்பதேன்...
இன்று நாளை என்றும் உங்கள் உரிமையல்லவா...
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...
ஹா ஹா ஹா ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...
நெற்றிக் குங்குமம்...
நெற்றிக் குங்குமம்...கெட்டுப் போகுது சற்றே நில்லுங்கள்...
பட்டுக் கூந்தல் தொட்டுத் தழுவி சங்கதி சொல்லுங்கள்...
எட்டுப் பிறவிகள் எட்டும் போதிலும் நீயே மனையாட்டி...
ம்
இளமை அற்புதம் இன்பம் அற்புதம் வாடி ராஜாத்தி...
அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்...
எங்கே...ஆ ஆ ஆ ஆ
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...
ஆ ஆ ஆ ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...
ஆஆஆஆ தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்...
தாளாதம்மா நாள் முழுதும்...
அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்...
2 கருத்துகள்:
நல்ல பாடல்கள்.. நிறைய ரசித்திருக்கிறேன்.
இது வில்லங்கமான பாடல் இல்லை அய்யா !! இது கிக்கான பாடல். ஊடல் கூடல் குஜால்டி பாடல் என சொல்லலாம். எஸ்பிபி இளமை அற்புதம் இன்பம் அற்புதம் வாடி ராஜாத்தி என்று சொல்லும் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கணவன் மனைவி சல்லாபத்தை அழகான பாடலில் வடித்துள்ளார் கவிஞர்.
கருத்துரையிடுக