பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 மார்ச், 2011

காதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது அதை கேட்டு

திருமதி உமா ரமணன் மறைந்த திரு மலேஷியா வாசுதேவனுடன் இணைந்து பாடிய பாடல். என்ன அழகான குரல்கள் மற்றும் இசையமைப்பு?


திரைப் படம்: அன்பே ஓடி வா (1984)
இசை: இளையராஜா  
பாடல்: வாலி
நடிப்பு: மோகன், ஊர்வசி
இயக்கம்: R ரஞ்ஜித் குமார்




http://www.divshare.com/download/14192272-b3f

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீ ஆனால்
அதன் நாதம் நான் ஆவேன்
போதை ஏறும் புது ராகம் நீ ஆனால்
அதன் பாவம் நான் ஆவேன்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு


நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து
நெஞ்சில் வைத்து பார்த்தேனே என்னை மறந்து
மானும் மீனும் வாழும் கண்ணில் என்னை வைத்தாயோ
பாசம் என்னும் நூலை கொண்டு நெஞ்சை தைத்தாயோ
நான் இனிமேல் உன்னோடு தான்
நீ நடந்தால் பின்னோடு நான்
நான் இனிமேல் உன்னோடு தான்
நீ நடந்தால் பின்னோடு நான்
என் நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீ ஆனால்
அதன் நாதம் நான் ஆவேன்
போதை ஏறும் புது ராகம் நீ ஆனால்
அதன் பாவம் நான் ஆவேன்

கூட்டில் ஒரு ஜோடி சிட்டுகுருவி
கொஞ்சி கொஞ்சி பேசும் தொட்டு தழுவி
காண காண நானும் நீயும் பக்கம் நெருங்க
கட்டி கொண்டும் ஒட்டி கொண்டும் முத்தம் வழங்க
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
அம்மாடி அப்பாடி உன் ஆசை பொல்லாது

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீ ஆனால்
அதன் நாதம் நான் ஆவேன்
போதை ஏறும் புது ராகம் நீ ஆனால்
அதன் பாவம் நான் ஆவேன்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக