பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 மார்ச், 2011

அமுத தமிழில் எழுதும் கவிதை..புதுமை புலவன் நீ..

பொதுவாகவே எம் ஜி யாரின் படப் பாடல்கள் மிக நுணுக்கமாக தேர்ந்தெடுக்கப் பட்ட பாடல்களாகத்தான் இருக்கும். அதுவும் அவரது சினிமா உலகின் இறுதிக் காலக் கட்டத்தில் இளையத் தலைமுறைக்கும் பழையவர்களுக்கும் நிறைய இடைவெளி தோன்ற ஆரம்பித்த நேரமது. அப்போது இரு சாராரையும் சுண்டியிழுக்கும் விதமாக பாடல்கள் அமையவேண்டிய கட்டாயத்தில் உருவான பாடல்களில் இது ஒன்று. நல்ல சுகமான பாடலிது.


திரைப் படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978)
நடிப்பு: எம் ஜி யார், லதா, வீரப்பன்
இயக்கம்: எம் ஜி யார்
இசை: விஸ்வனாதன்
குரல்கள்: வாணி ஜெயராம், ஜெயசந்திரன்
பாடல் ஆசிரியர்: புலமைபித்தன்




http://www.divshare.com/download/14299723-105
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..

புவி அரசர்க்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ..
புரட்சி தலைவன் நீ..

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ..
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ..

சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ..
விளக்க உரையும் நீ..

நானம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன..
நானம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன..

உன்னை ஒரு கனமும்
என்னை மறு கனமும்
உள்ளம் நினைப்பதென்ன
உள்ளம் நினைப்பதென்ன

நாதம் இசைத்து வரும்
பாத மணிசிலம்பு
என்னை அழைப்பதென்ன..
நாதம் இசைத்து வரும்
பாத மணிசிலம்பு
என்னை அழைப்பதென்ன..

ஊஞ்சல் அசைந்துவரும்
நீல விழி இரண்டின்
வண்ணம் சிவப்பதென்ன..
வண்ணம் சிவப்பதென்ன..

எதுகை அது உனது
இருக்கை அது எனது
பெண்மை ஆடட்டுமே..
எதுகை அது உனது
இருக்கை அது எனது
பெண்மை ஆடட்டுமே..

ஒரு கை குழல் தழுவ
மறு கை உடல் தழுவ
இன்பம் தேடட்டுமே..
இன்பம் தேடட்டுமே..

வைகை அணை நெருங்கி
வைகை அணை மதுரை
வை கை அணைப் போலவே..
மங்கை எனும் அமுத
கங்கை பெருகுவது
நீந்தி கரைக் காணவே..
நீந்தி கரைக் காணவே..

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..

புவி அரசர்க்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ..
புரட்சி தலைவன் நீ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக