பின்பற்றுபவர்கள்

புதன், 23 மார்ச், 2011

கண்களும் காவடி சிந்தாகட்டும்,காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்


உண்மையிலேயே சில தமிழ் திரைப் படப் பாடல்கள் கோழையையும் வீரனாக்கும் வகையில் கவிதைகள் எழுதி, இசையமைக்கப்பட்டு பாடலாகி இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்று.


திரைப் படம்: எங்க வீட்டு பிள்ளை (1965)
இயக்கம்: சாணக்கியா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
குரல்: L R ஈஸ்வரி குழுவினருடன்
பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு






http://www.divshare.com/download/14308918-b53








கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்,
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ
 ஹா ஹா ஹா ஹா ஹா..
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளயர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்,
மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்
கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்
என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கையிலே அன்பு ஒலி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக