பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 மார்ச், 2011

மலர்கள் நனைந்தன பனியாலே...மலர்கள் நனைந்தன பனியாலே

பாடலாசிரியர்கள் கண்ணதாசனும் வாலியும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஆண் பென் உறவை கொச்சைப் படுத்தாமல் அழகாக கவி நயத்துடன் வெளிப் படுத்துவதில் வல்லவர்கள். அந்த வரிசையில் இந்த பாடல் ஒரு பெண்ணின் முதல் இரவுக்கு பின் அவள் அந்த இரவின் உறவை ரசித்து பாடுவதாக அமைந்தது. குரலும் இசையும் கவிதையுடன் இணைந்து ஒலிக்கின்றது


திரைப் படம்: இதயக் கமலம் (1965)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ரவிசந்திரன். K R விஜயா:
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்: P சுசீலா




http://www.divshare.com/download/14405876-d41






மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக