பின்பற்றுபவர்கள்

சனி, 9 ஏப்ரல், 2011

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

மீண்டும் எம் ஜி யாரின் படப் பாடல் ஒன்று. இளைய மற்றும் முதிய ரசிகர்கள் இருவரையும் கவர வேண்டிய கட்டாயத்தில் இன்னுமொரு பாடல்.

திரைப் படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978)
இயக்கம்: எம் ஜி யார்
நடிப்பு: எம் ஜி யார், லதா, வீரப்பன்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: K J யேசுதாஸ், வாணி ஜெயராம்
பாடல்: புலமைபித்தன்

http://www.divshare.com/download/14299679-6ec

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..
தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நானம்..
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நானம்..
இனி என்ன நானம்..

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்..
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்..
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில் ஏன் இந்த வேகம்..
ஏன் இந்த வேகம்..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

பாவை உடல் பாற்க்கடலில்..
பள்ளி கொள்ள நான் வரவோ..
பாவை உடல் பாற்க்கடலில்..
பள்ளி கொள்ள நான் வரவோ..

பனி சிந்தும் கனி கொஞ்சும்..
பூவிதழில் தேன் பெறவோ..

மாலை வரும் நேரமெல்லாம்..
மன்னன் வர காத்திருந்தேன்..
மாலை வரும் நேரமெல்லாம்..
மன்னன் வர காத்திருந்தேன்..

வழியெங்கும் விழி வைத்து..
பார்த்த விழி பூத்திருந்தேன்..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

ஆலிலையின் ஓரத்திலே..
மேகலையின் நாதத்திலே..
ஆலிலையின் ஓரத்திலே..
மேகலையின் நாதத்திலே..

இரவென்றும் பகலென்றும்..
காதல் மனம் பார்ப்பதுண்டோ..

கள்ள விழி மோகத்திலே..
துள்ளி வந்த வேகத்திலே..
கள்ள விழி மோகத்திலே..
துள்ளி வந்த வேகத்திலே..

இதழ் சிந்தும் கவி வண்ணம்..
காலை வரை கேட்பதுண்டோ..
காலை வரை கேட்பதுண்டோ..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

கற்பகத்துச் சோலையிலே..
பூத்த மலர் நீ அல்லவோ..
விழியென்னும் கருவண்டு..
பாட வந்த பாட்டென்னவோ..
காவியத்து நாயகனின்..
கட்டழகு மார்பினிலே..
சுகம் என்ன சுகமென்று..
மோஹன பண் பாடியதோ..
மோஹன பண் பாடியதோ..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்...
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நானம்..
இனி என்ன நானம்...

2 கருத்துகள்:

அமைதி அப்பா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அமைதி அப்பா சொன்னது…

நீண்ட நாட்களாக, நான் மறந்திருந்த அற்புதமான பாடலைக் கேட்க செய்தமைக்கு நன்றி.

கருத்துரையிடுக