பின்பற்றுபவர்கள்

சனி, 16 ஜூன், 2012

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே அழகிய ராணி


M S விஸ்வனாதன் T K ராமமூர்த்திக்கு  அமைந்த பல சிறந்த பாடல்களில் இந்தப் பாடல் தனி இடம் எடுத்துக்  கொண்டது. எப்படி இத்தனை நாட்கள் இந்த பாடலை தரம் ஏற்றாமல் விட்டேன் என்பதில் எனக்கே ஆச்சர்யம்தான். மிக அருமையான பாடல்.

திரை படம்: வீர திருமகன் (1962)
குரல்கள்: P B S, P சுசீலா
நடிப்பு: C L ஆனந்தன், சச்சு
இயக்கம்: A C திருலோகசந்தர்
பாடல்: கண்ணதாசன்
http://www.divshare.com/download/18380764-21f

ல ல லல லா ல ல ல லல ல ல ல
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானாவாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமமன்றோ ஹோய்

பேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோவானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ


ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோமன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழ்வும் தோழியரும்

பஞ்சனை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே


ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானா

பாடும் பறவைக் கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறை அன்றோ

என்றும் நிலை அன்றோ


ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா
ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹாஹா

2 கருத்துகள்:

கருத்துரையிடுக