பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 ஜூன், 2012

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா

நல்ல அழகான அபூர்வ பாடல். இனிமையான குரல்களில் ஒலிக்கின்றது.

படம்: அம்மா பிள்ளை (1990)
பாடியவர்கள்: வாணி ஜெயராம், மனோ
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: ராம்கி, சீதா
இயக்கம்: R C சக்தி

http://www.divshare.com/download/18397027-893

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள கூடாதா மல்லிகையும் வாடாதா
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
நல்ல பதில் நீ உரைத்தாய் நன்றி நான் எப்படி சொல்ல

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

மச்சமுள்ள தாமரை என் மார்பில் தோளில் வந்தாடுதே
மிச்சம் உள்ள பெண்மையை உன் கையில் அள்ளி தந்தாடுதே
வானத்தை பார்த்திருந்தேன் முத்துக்கள் வீழ்ந்ததம்மா
நட்டது பூச்செடிதான் நட்சத்திரம் பூத்ததையா
ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை ஒன்றாய் நின்றதம்மா

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

உன்னை கண்ட நாள் முதல் என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது
பெண்ணைக் கண்ட நாள் முதல் என் நெஞ்சில் ஏதோ போர் மூண்டது
பெண் மயில் உன் பெயரை உச்சரிக்க நாணம் வரும்
பெண்மையே உன் புகழை உச்சரிக்க ஞானம் வரும்
கண்ணா உன்னை காணா விட்டால் கண்ணில் ரத்தம் வரும்

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
நல்ல பதில் நான் உரைத்தேன் நன்றியை முத்தத்தில் சொல்லு

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக