பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 29 ஜூன், 2012

வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்


நல்ல தமிழிலில் சுவையான இசையில் அழகான குரலில் ஒரு நல்ல வேகமான பாடல்.

திரைப் படம்: பாதுகாப்பு
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: A பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதாhttp://asoktamil.opendrive.com/files/Nl8zNzYxNTQ0OF9BZmJ6TF83MjRk/varacholladi%20anthi%20maalai.mp3
வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி  
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி 
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி

தெய்வானை போல் என்னை நினைத்தாலென்ன
என் செந்தூரம் கரைந்தோட அணைத்தாலென்ன
கையோடு கைகொஞ்சம் கலந்தாலென்ன
கையோடு கைகொஞ்சம் கலந்தாலென்ன
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன
வரச் சொல்லடி
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி

மலைக்கோவில் குமரேசன் அறியாததா
என் மடியென்ன கதை சொல்ல தெரியாததா
கலைக்கோவில் அவன் காண முடியாததா
அது கனிவானதா கொஞ்சம் பதமானதா

வந்தானை சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
வந்தானை சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
பக்தி சுவையுடன் தித்திதொரு இதழ்
முத்துத் தருமென நின்றானை
வள்ளிக் குறமகள் அள்ளிப் பருகிட
பள்ளித் தலம் வரை சென்றானை
முருகனை குமரனை கந்தனை வேலனை
முருகனை குமரனை கந்தனை வேலனை
வசந்தம் நிறைந்து மயங்கும் இரவில்
மானிவள் ஆனந்த சாலைக்கு
வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
அவனை வரச்சொல்லடி

3 கருத்துகள்:

கே. பி. ஜனா... சொன்னது…

மிக அழகிய பாடல். இந்தப் படத்தில் சந்திரபாபு பாடிய "நம்பல் கி பியாரி..." என்ற டூயட் பாடலும் டி.எம்.எஸ். சுசீலா பாடிய 'நான் கொஞ்சம் ஓவர்..." என்ற பாடலும் மறக்க முடியாதவை. கேட்டிருக்கிறீர்களா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எப்போதே கேட்ட பாடல். பகிர்வுக்கு நன்றி சார் !

Covai Ravee சொன்னது…

இனிமையான பாடல் பகிர்விற்க்கு நன்றி.

கருத்துரையிடுக