மீண்டும் நமது T ராஜேந்தர். மறக்ககூடியவரா அவர். மற்றவரின் இயக்கத்தில்
T ராஜேந்தர் எழுதி இசையமைத்த பாடல். உயர்ந்த கவிதை வரிகளுடன் ஒரு இனிமையானப் பாடல்.
திரைப் படம்: கிளிஞ்சல்கள் 1981
குரல்கள்: S ஜானகி, Dr கல்யாண்
பாடல், இசை: விஜய T ராஜேந்தர்
நடிப்பு: மோகன், பூர்ணிமா ஜெயராம்
இயக்கம்: துரை
http://www.divshare.com/download/19482124-b71
ப பப ப பப ல ல ல ல
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா ஹா
Julee I love you
ஹா ஹா ஹா
ப ப பம் ப ப பம் ப ப பம் ப ப பம்
Julee I love you
ஆஹா ஆஹா ஆஹா
Julee I love you
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மன வீணயிலே நாதமீட்டி
கீதமாக்கி நீந்துகின்ற தலைவா
இதழ் ஓடையிலே வார்த்தை என்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா
Julee I love you
ஆஹ் ஆஹ் ஆஹ்
பப ப ப
நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
மது மாலையிலே மஞ்சள் வெய்யில் கோலமென
நெஞ்சம் அதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென்ன
உள்ளம் அதில் நீ பொங்க
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ்
Julee I love you
Julee I love you
ஹா
2 கருத்துகள்:
படிக்கும் காலத்தில் இந்தப்பாடலை எத்தனை முறை பாடியிருப்போம் என்று தெரியாது...
கல்யாண சுந்தரம் சாரின் குரல் பாலுஜி குரலுக்கு கிட்டக்க இருப்பது போல இருக்கு ஹம்மிங் அவரின் பாணியில் பாடியிருப்பார். நல்ல பாடல் பகிர்விற்க்கு நன்றி.
கருத்துரையிடுக