பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

முத்து ரதமோ முல்லைச் சரமோ


ஜெயசந்திரன் மற்றும் வாணி ஜெயராம் குரலில் மற்றுமொரு இனிமையான பாடல் இங்கே.

திரைப்படம்: பொன்னகரம் (1980)
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: மாதங்கன்
நடிப்பு: சரத் பாபு, ஷோபா














முத்து ரதமோ முல்லைச் சரமோ
முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

முத்து முகமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுத கனிகள் தருமோ
இரவுக் காலம் நிலவுக் கோலம்
இதயம் மயங்காதோ
உறவுத் தேரில் உரிமை போரில்
என்னை இழுக்காதோ

முத்து முகமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு

வானில் வசந்தம் தேனின் சுவைபோல்
நேரில் வாராதோ
உறவில் கலைகள் வளரும்
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது
தினமும் சுவைகள் மலரும்
உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
காதல் உறவாடு

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்... நன்றி...

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

very very amazing song.

கருத்துரையிடுக