பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 டிசம்பர், 2012

முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லை பூ விரிப்பல்லவோ

நல்ல இனிமையான பாடல்,இசையமைப்பிலும் கவிதை வரிகளிலும், பாடும் குரல்களினாலும்.  ஆனாலும் படக் காட்சி என்னவோ ஒரு மெச்சூரிடி இல்லாத நடனத்துடன் ஏனோதானோவென இருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் எம் ஜி யாரும் முத்துவும் நடித்தால் மக்கள் எப்படி இருந்தாலும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.

திரைப் படம்: பூக்காரி (1973)
நடிப்பு:  மு க முத்து, மஞ்சுளா
இசை:  M S விஸ்வனாதன்
இயக்கம்: பஞ்சு கிருஷ்ணன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: T M சௌந்தர்ராஜன், P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NDA3OV9vSjA0T181NWQy/Muththu%20pal%20siripennavo.mp3







முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தொட்டுப் பேசும் நாள் அல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
கண்ணா உன் தோள் தொட்டு
கதை சொல்லும் நாள் தொட்டு
காணாத ஆனந்தம் வேறென்னாவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சந்தங்கள் வரும் அல்லவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சந்தங்கள் வரும் அல்லவோ
இந்த மோகம் யார் தந்ததோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ

தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ
ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ
அங்கங்கே நான் தொட்டு
அடையாளம் தானிட்டு
ஆசைகள் ஆயிரம் வேர்விட்டதோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
வண்ணத் தோகை என் சொந்தமோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்
கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்

முப்பாலில் மூன்றாம் பால்
உருவாகும் உன் அன்பால்
மோகங்கள் காட்டு உன் புன் சிரிப்பால்

அம்மம்மா துடிப்பென்னவோ
அப்பப்பா நடிப்பென்னவோ
அம்மம்மா துடிப்பென்னவோ
அப்பப்பா நடிப்பென்னவோ
இந்த வேகம் ஏன் வந்ததோ

முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ




2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

கருணாநிதி அப்போது (1972 ஆண்டு துவக்கம் ) தி மு க வில் இருந்த MGR செல்வாக்கைக் குறைப்பதற்காக தனது மகன் மு க முத்தை (முதல் மனைவியின் மகன் ) நடிகராக முன் நிறுத்தினார். அதனால் மு க முத்து தனது படங்களில் MGR பாணியையே பின் பற்றினார். அவருடைய முதல் படம் பிள்ளையோ பிள்ளை இரண்டாவது படம் பூக்காரி மட்டுமே கவனத்தைப் பெற்றன. அதுவும் படத்தைத் தயாரித்தது கருணாநிதி முரசொலி மாறன் கூட்டு நிறுவனமான மேகலா பிக்சர்ஸ். மு க முத்து நடித்த மற்ற படங்கள் வந்த சுவடு தெரியாமல் சென்று விட்டன.

மு க முத்து நல்ல குரல் வளம் உடையவர். இதில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு சிறந்த பின்னணி பாடகராக வந்திருப்பார்.

Unknown சொன்னது…

விபரங்களுக்கு நன்றி நாகராஜன்.

கருத்துரையிடுக