பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

ஆசை அன்பு இழைகளினாலே

இனிமையான பாடல். ஏதோ ஹிந்தி பாடலின் காப்பி போல தெரிந்தாலும் நன்றாக இருக்கும். அமைதியான மென்மையான இசை பின்னனியில் அருமையாக இருக்கிறது.

நடிப்பு: சிவகுமார், ஜெயசித்ரா (1974???)
பாடகர்கள்: P.சுசீலா, T M. சௌந்தரராஜன்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: கண்ணதாசன்???

http://www.mediafire.com/?29ezdgkdy4kv3gh



ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளை போலவே
வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளை போலவே

எண்ணிப் பார்க்க  ரெண்டு போதும்
நம்மை போலவே
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மை போலவே

மன கண்கள் அந்த கனவே காணுதே

நாம் காணும் இன்பம் நினைவாய் தோணுதே

ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னை பற்றியே
எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னை பற்றியே

அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னை சுற்றியே
அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னை சுற்றியே

அதன் சின்னம் தோன்றி
உருவம் காட்டுதே
அது உன்னை போல சிரிப்பை மூட்டுதே

ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை


ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

ஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா

1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

இது ஒரு ஹிந்திப் பாட்டின் மெட்டே. படம் வெள்ளிக்கிழமை விரதம். வருடம் 1974. அ மருதகாசியின் பாடல் வரிகள்.

கருத்துரையிடுக