பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 டிசம்பர், 2012

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

பாடலாசிரியர் மாயவ நாதன்....இவர் குறைந்தளவே பாடல்களை (மொத்தமாகவே 15 பாடல்கள் இருக்கலாம்) தமிழ் திரையில் எழுதி இருக்கிறார். ஆனாலும் அத்தனை பாடல்களும் சிறப்பானவை. தாலாட்டு என்ற படத்தில் மல்லிகை பூ போட்டு, தன் நிலவு தேனிறைக்க மற்றும் பூம்புகார் படத்தில் சில பாடல்கள் என சிறந்த வரிகளைக் கொண்ட பாடல்கள். தமிழ் திரை அரசியல் தெரியாதவர். ஆகையால் ஏழையாகவே இறந்து போனார். அவருடைய பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலை கேட்டு மகிழ்வோம்.
பாடலின் ஆரம்பத்தில், உண்மையிலேயே மழையில் நனைந்து குளிரில் நடுங்கும் ரெண்டு இளம் ஜோடிகளாக  பாடியவர்கள் உருவகப் படுத்தியுள்ளது பிரமாதம்.

திரைப்படம்: தேர்த்திருவிழா (1968)

இசை: கே.வி. மஹாதேவன்

பாடகர்கள்: டி.எம்செளந்தராஜன், பி.சுசீலா

இயற்றியவர்: மாயவநாதன்

நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா

இயக்கம்: எம் ஏ திருமுகம்








மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

ஹோ

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

ஹோ

என்னம்மா பண்ணுது

உள்ளதைச் சொல்லு

என்னமோ பண்ணுது

என்னத்தை சொல்ல

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

கட்டுக் குலையாத அரும்பைத்

தொட்டு விளையாட

நெருங்கி ஒட்டி உறவாட

வந்தது காத்து

மொட்டுச் சிரிப்பாட இடையில்

பட்டு விரிப்பாட

அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி

குலுங்குது பூத்து

கட்டுக் குலையாத அரும்பைத்

தொட்டு விளையாட

நெருங்கி ஒட்டி உறவாட

வந்தது காத்து

மொட்டுச் சிரிப்பாட இடையில்

பட்டு விரிப்பாட

அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி

குலுங்குது பூத்து

பூ வாகிப்பிஞ் சாகிக்கா யாகிக்கனியாச்சி

அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

வெத்திலை பாக்கு வச்சி

விருந்து வீட்டுலே கூட்டிவச்சி

தாலிகட்டியே கைபுடிச்சி

கலந்திட வேண்டும்

குத்துவிளக்கு வச்சி

குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி

இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி

சுகம் பெறவேண்டும்

வெத்திலை பாக்கு வச்சி

விருந்து வீட்டுலே கூட்டிவச்சி

தாலிகட்டியே கைபுடிச்சி

கலந்திட வேண்டும்

குத்துவிளக்கு வச்சி

குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி

இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி

சுகம் பெறவேண்டும்

கா லாடமே லாடக் கையாடமுகம் சிவக்கும்

என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்

மழை முத்து முத்துப்

பந்தலிட்டு கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக