பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 மே, 2013

பொன்னி நதி வெள்ளம் இன்று

சத்யராஜும் மலேஷியா வாசுதேவனும் வில்லன்களாக அட்டகாசமான  நடிப்பு எனக்கு ஞாபகம் இருக்கிறது. மற்றைய விஷயங்கள் சொல்லிக் கொள்ளுமாறு இருக்காது. பாலுவின் குரலில் இதுவும் ஒரு அற்புதமான பாடல் .

திரைப் படம்: முதல் வசந்தம் (1986)
நடிப்பு: பாண்டியன், ரம்யாகிருஷ்ணன் 
இயக்கம்: மணிவண்ணன் 
குரல்: S P B
பாடல்: கங்கை அமரன்?? சரியாக தெரியவில்லை 
இசை: இளையராஜா 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTIzMTk0OV9STlNFM185MWY0/Ponni%20Nathi.mp3





பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
ஆ ஆ ஆ


பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே


பூவின் வாசமே பூஜை நேரமே
என் காதலின் சங்கமம் இன்றுதான்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

பனியில் நனைந்த பூ மேனி
பருகத் துடிக்கும் நான் தேனி
அது தந்த சுகம் இன்ப சுகமே
புது தந்த முகம் இன்ப முகமே
தெய்வம் சேர்த்த நம் கைகள்
சொந்தம் பாடுது
தென்றல் காற்றில் நம் பாடல்
சொர்க்கம் தேடுது
இது இளமை இனிமை புதுமை

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

தென்றல் இசைக்கின்ற சங்கீதம்
சொல்லி வருவது உல்லாசம்
மனம் 
தன்னில்  சுகம்  சொல்ல  வந்தது
மலர் தந்த மணம் கொண்டு வந்தது
பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது
அங்கம் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது
இங்கு இனிமை கனவுகள் உதயம்

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
நாளும் உன்னிடம் நாணம் என்னிடம்
நீ தந்தது என்னுயிர் இன்பமே

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான இழுவை...

நன்றி...

பெயரில்லா சொன்னது…

இனிமையான இசைக் கலவை.

கருத்துரையிடுக