பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2013

முத்தைத் தரு பத்தித் திருநகை

எனதினிய நண்பர்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.



ஷண்முகப் பிரியா ராகத்தில் அமைந்த இந்தப்  பாடகர் திலகம் டி எம் எஸ் ஒரே டேக்கில் பாடி முடித்ததாக சரித்திரம்.
இந்தப் பாடலை இப்படி வரிவடிவில் எழுத வாய்ப்பு கொடுத்த கிணற்றுத் தவளை நண்பர்களுக்கு நன்றி. இங்கே தவறுதலாக இடம் பெற்று இருக்கும் இலக்கணப் பிழைகளை உயர்தமிழ் அறிஞர்கள் மன்னித்து ஆதரிக்க வேண்டும்.
பாடல் வரிகளை எடுத்து எழுதவே இப்படி என்றால் பாடியவரின் திறமையை என்னவென்று சொல்லா?????

T R பாப்பா இசையமைத்த இந்தப் பாடலை, அருள்திரு கிருபானந்த வாரியார் உதவியுடன் டி எம் எஸ் இலக்கண சுத்தமாக பாட பயிற்சி எடுத்து பின் பாடியதாக 'தி ஹிந்து' சொல்கிறது.
தமிழ் திரை உலகப் பாடல்களில் ஒரு உன்னதனமானப் பாடல் இதுவாகும்.

திரைப் படம்: அருணகிரிநாதர் (1964)
இசை: G R ராமநாதனும் T R பாப்பாவும் இணைந்து வழங்கியுள்ளனர்
நடிப்பு: டி எம் எஸ், B S சரோஜா (அருணகிரியின் சகோதிரியாக), M R ராதா, சாரதா
இயக்கம்: ராமண்ணா
பாடல் அருளியது: ஸ்வாமி அருணகிரிநாதர்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzgwNjkxMF9lTVVjVF9lOWNl/Muthai%20Tharu%20-%20Arunagirinathar.mp3






முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிரை சத்தி சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முருகா

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிரை சத்தி சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிரை சத்தி சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பதுமூ வர்க்கத்த மரரும் அடிபேண

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பதுமூ வர்க்கத்த மரரும் அடிபேண

பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக

பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக

பத்தர்க்க் இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

பத்தர்க்க் இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நித்தப்பதம் வைத்துப் பைரவி
திக்கொக் கணடிக்கக் கழுகொடு கழுதாட

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நித்தப்பதம் வைத்துப் பைரவி
திக்கொக் கணடிக்கக் கழுகொடு கழுதாட

திக்குப் பரி நட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத

திக்குப் பரி நட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத

கொத்துப் பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகு குகு
குத்திப் புதை புக்குப் பிடி என முது கூகை

கொத்துப் பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகு குகு
குத்திப் புதை புக்குப் பிடி என முது கூகை

கொட்புற்ற ரெழ நட்பற்ற ரௌனரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

கொட்புற்ற ரெழ நட்பற்ற ரௌனரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே





7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த பாடலின் வரிகள் எழுதுவதற்கு சிறிது சிரமம் தான்... நன்றி ஐயா... பாராட்டுக்கள்...

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் நன்றி தனபாலன் ஸார்

Raashid Ahamed சொன்னது…

இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் சார். (எங்கு கொண்டாடினீர்கள் ? தாய் நாட்டிலா அயல் நாட்டிலா ?)

Raashid Ahamed சொன்னது…

மிகவும் கடினமான ஒரு தமிழ் பாடல் இது. இதை இலகு தமிழில் மொழிபெயர்க்க தமிழறிவு மிகவும் அவசியம். டிஎம்எஸ் போன்றொரு மேதை பாடியதால் கேட்க இனிமை.

Unknown சொன்னது…

நன்றி ராஷித் ஸார். வழக்கம் போல அயல் நாடுதான் நமது கதி. அடுத்த வருடமாவது தீபாவளியை உள்ளூரில் பேற்றோருடனும் உறவினர்களுடனும் கொண்டாடிக் களிக்க உறுதிபூண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

Unknown சொன்னது…

Stop stealing the videos first . You never understand How people work hard for uploading songs.

கருத்துரையிடுக