பின்பற்றுபவர்கள்

சனி, 11 ஜனவரி, 2014

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே

இனிமையானப் பாடல்.  பாடலின் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் நம்மை கட்டிபோடும் பாடல்.


திரைப்படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982)
பாடியவர்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம் 
பாடல்: குருவிக் கரம்பை சண்முகம் 
இசை: சங்கர் கணேஷ் 
இயக்கம்: M பாஸ்கர் 
நடிப்பு: சிவகுமார், அம்பிகா 

http://asoktamil.opendrive.com/files/Nl8xODg0ODYxNV9sYVRuYl9hMGE4/Raagam%20Thaalam%20pallavi-theerppugaL%20thiruththap%20padalaam.mp3





லாலா லாலா லல்லலா லல

ராகம் தாளம் பல்லவி 
அது காதல் பூபாளமே

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

ஆ ஹா ஆ ஹா 

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலோ

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மென் காற்று மெல்ல அள்ள வா

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலோ

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம்  மென் காற்று மெல்ல அள்ள வா

தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்

மாலைகள் சூடிக்கொள்ளும்
தேதி பார்க்கட்டும்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்
ஆ ஹா ஆ ஹா 
பொங்கும் இந்நாளே 
நம் பொன் நாள்

வானும் மண்ணும் தீபம் ஏற்றி மாறும் நேரம் இது
வானும் மண்ணும் தீபம் ஏற்றி மாறும் நேரம் இது

பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளை இது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளை இது

காலங்கள் மேளங்கள்

நேரங்கள் தாளங்கள்

தேகங்கள் ராகங்கள்

கோலங்கள் போடுங்கள்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்

ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும்

இந்நாளே

நம் பொன் நாள்

ஆ ஹா  ஆ ஹா பொங்கும் இந்நாளே 
நம் பொன் நாள்

லலல்லலல் லாலா லலல்ல லலல லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக