பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2014

தங்கமலரே உள்ளமே

அன்பர்கள் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் பிசி.

இதோ பாடல். பாடலின் ஆரம்ப வரிகளும் சுசீலா அம்மாவின்  குரலும் இணைந்து தாலாட்டு பாடல் போலிருக்கிறது. பாடல் காட்சி, காதல் பாடலாக இருக்கிறது. இனிமையான குரலில் அழகான பாடல்.

திரைப் படம்: தங்க மலர் (1969)
இசை: T G லிங்கப்பா 
குரல்: P சுசீலா 
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி 
இயக்கம்: D S ராஜகோபால் 
பாடல்: கண்ணதாசன் 

http://asoktamil.opendrive.com/files/Nl8yOTI3OTI0OV9QRnRjb19mMmQy/thangamalare%20ullame.mp3






தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே

தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே 
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே
தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே

தூக்கி வைத்த கரம் தனிலே
தாயைக் கண்டேனே
நீ துள்ளி வந்து சிரித்த போது
சேயைக் கண்டேனே

சூடி வைத்த மலர்களில் 
உன் கருணை கண்டேனே
சூடி வைத்த மலர்களில் 
உன் கருணை கண்டேனே

என்னை தொட்டிழுத்து அணைத்த போது
தெய்வம் கண்டேனே
தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே 

எந்த நாட்டில் பொன்னி வெள்ளம்
பெருகி ஓடுமோ
எந்த நாட்டில் கோபுரங்கள்
உயர்ந்து காணுமோ

அந்த நாட்டில் பிறந்து வந்த
தலைவன் அல்லவா
அந்த நாட்டில் பிறந்து வந்த
தலைவன் அல்லவா
அந்த நாட்டில் பிறந்து வந்த
தலைவன் அல்லவா
என்னை ஆள வந்து வாழ வைத்த
இறைவன் அல்லவா 

தங்கமலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே 
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே
ம்ம்ம்ம்ம் 
ம்ம்ம்ம் 
ம்ம்ம்ம்ம்ம் 
ம்ம்ம்ம்ம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக