பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பாவலன் பாடிய புதுமை பெண்ணை பூமியில் கண்டது இன்று

கருத்துகள்  நன்றி: msvtimes.com/forum

மெல்லிசை மன்னரின் நண்பரும் மிகசிறந்த அரசியல் விமர்சகருமான திரு சோ ராமசாமி முதலில் நாடகமாகவும் பின்னர் திரைபடமாகவும் எடுத்த வெற்றி சித்திரம் முகமது பின் துக்ளக்.. 1971 இல் வெளிவந்தது….

இப்படத்தின் பெயரை கேட்டவுடன் பெரும்பாலோருக்கு நினைவு வருவது….அல்லா அல்லா என்ற பாடல்… பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றது…இன்றும் இஸ்லாமிய புனித தினங்களில் இப்பாடலானது கேட்கபடுவது….எம்.எஸ்.வி. யே பாடியது

ஒரு சுதந்திர போராட்ட தியாகி தன் சீடர்களுடன் சேர்ந்து இந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு அறியாமையில் வாழ்கிறார்கள் என்றும் எவ்வளவு முட்டாள்கள் என்றும் ……எளிதாக நம்பிவிடுவார்கள் என்று உணர்த்துவதற்காக ஒரு செயலை செய்வார்கள்... டில்லியை ஆண்ட முகமது பின் துக்ளக் உண்மையில் இறக்கவில்லை என்ற ஒரு மாயையை உண்டாக்கி அவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கி பின்னர் பிரதம மந்திரியாகவும் ஆகிவிடுகிறார்.அவர் நடத்தும் ஆட்சி கேலிகூத்தாகிறது...ஒரு துணை பிரதம மந்திரியை அமர்த்துகிறார். (மனோரமா...அந்த தியாகியின் பெண் )...பதவி ஆசை யாரைத்தான் விட்டது..அவருக்கு அப்பதவி மிகவும் பிடித்துபோக அவர் அதை நன்றாக னுபவிக்கிறார்...ஊழல்கள் செய்கிறார்...அதிகாரத்தை செலுத்துகிறார்….அவர் பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்...அச்சமயத்தில் தான் இந்த பாடல் வரும்...

தீர்க்க தரிசி சோ நேற்று இன்று நாளை என நமது அரசியல்வாதிகளை படம் பிடித்துகாட்டியிருப்பார் இந்த படத்தில்.

http://asoktamil.opendrive.com/files/Nl8yODk0NTI3MV9vdVpWQ183ODdj/PAAVALANPAADIYA_MOHAMEDPINTHUUKLAK.mp3





லலலலலலலலல
பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

ல ல ல ல ல

நீ இருக்குமிடம் குடியிருக்கும்
குடி இருக்கும்
குடியிருக்கும்
அன்பு குடியிருக்கும்

நீ இருக்குமிடம் குடியிருக்கும்
அன்பு குடியிருக்கும்
உன் நிழலிருக்குமிடம் ஒளி இருக்கும்
என்றும் ஒளி இருக்கும்
நல்ல ஓளி இருக்கும்

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU

நாகரீகம் தனை மனம் வெறுக்கும்
உந்தன் மனம் வெறுக்கும்

உண்ணும் உணவில் கூட செந்தமிழ் மணக்கும்
இன்பதமிழ் மணக்கும்

பொன்மாலை பரிசுகள் தேவையில்லை என
நாளும் கூறும் குணமிருக்கும்

நல்ல குணமிருக்கும்

பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

ஏழை வாழ்வு தர துடி துடிக்கும்
துடி துடிக்கும்
நெஞ்ஜம் துடி துடிக்கும்

உந்தன் ஆடை கூட அதை எதிரொலிக்கும்
இங்கு எதிரொலிக்கும்
எங்கும் எதிரொலிக்கும்

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU

கோட்டை மீது உந்தன் கொடி பறக்க
தனி கொடி பறக்க

இந்த நாட்டை ஆளவந்த குலவிளக்கே
பெண் குலவிளக்கே

தன் வீடு போலவே நாடு யாவையும்
நாளும் காணும் தமிழணங்கே

எங்கள் தழிழணங்கே

பாவலன் பாடிய புதுமை பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU

பாடலின் சிறப்பே இது மோகனகல்யாணி அல்லது கல்யாணியின் சாயலின் அமைந்தது தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக