பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 ஜனவரி, 2014

ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை

V குமார் அவர்களின் இசையில் பல பாடல்கள் சிறப்பானவை. அதுவும் எஸ் பி பி, K சொர்ணா அவர்களுடன் இணைந்து பாடியிருக்கும் பாடல்கள் நிறைய உண்டு. அவை யாவுமே இனிமையானவை. கே.சொர்ணா அவர்கள் திரு குமார் அவர்களின் மனைவி. எல்லா படத்திலும் ஒரு பாடலாவது அவருக்கு பாட வாய்ப்பு கொடுத்துவிடுவார்.
ஆனால் இங்கு பாடியிருப்பவர் அவர் அல்ல. இவை வேறு அழகிய பாடல்கள்.

S P பாலசுப்ரமணியம், P சுசீலா இருவரின் குரல்களில் இரண்டு பாடல்களும் இங்கே.

திரைப் படம்: ஏழைக்கும் காலம் வரும் (1975)
பாடியவர்: S P பாலசுப்ரமணியம், P சுசீலா தனித் தனியே பாடிய இரு பாடல்கள்.
இசை: V குமார்
இயக்கம்: ராஜேந்திர பாபு.
நடிப்பு: முத்துராமன், சுபா.
பாடல்: தெரியவில்லை

முதலில் S P பாலசுப்ரமணியம் குரலில்:

http://asoktamil.opendrive.com/files/Nl8yODg0NDI4MF9rNWJQWl9mMTBl/OraayiramKarpanai.mp3





இது P. சுசீலா அம்மாவின் குரலில்:
http://asoktamil.opendrive.com/files/Nl8yODg0NDUzOF9MTm95cl85ZmIz/oraayiram%20kar-eazhaikkum%20kaalam%20varum-PS.mp3







ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடி வா
ஓடி வா

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடி வா
ஓடி வா

நான் பாடும் ராகங்கள்
கார் கால மேகங்கள்
நான் பாடும் ராகங்கள்
கார் கால மேகங்கள்
தேன் மாரி பெய்யும்
தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக
தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடி வா

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை

ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம்
இசை பண்ணோடு
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என் உயிர் நாதம் சங்கீதம்
கீதமே நாதமே ஓடி வா

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடி வா


P. சுசீலா அம்மாவின் பாடல்:

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே ஓடி வா
ஓராயிரம் கற்பனை
உனக்காக பெண் ஒன்று உறங்காத கன் கொண்டு
எதிர் பார்க்கும் நேரம் இங்கு வாராயோ
பன்னீரில் ஆடாமல் கண்ணீரில் ஆடும் பூ மாலை நான் அல்லவா
வாழ்விலே வசந்தமே ஓடி வா
ஓராயிரம் கற்பனை
மாமன்னன் துஷ்யந்தன் மரந்தாலும் தோகைத் தன் உயிர் காதல் வெல்லும் என வாழ்ந்தாளே
பால் அல்ல கள்ளென்று ஊர் சொன்ன நாளுண்டு மெய்யல்ல பொய்யென்று காதலே கண்டு நீ ஓடி வா
நீ ஓடி வா
நீ ஓடி வா

நீ ஓடி வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக