பின்பற்றுபவர்கள்

சனி, 15 நவம்பர், 2014

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா kettathum koduppavane krishna...



இந்த பாடலில் சிதார் வாசித்தவர் யாரென்பது தெரியவில்லை. இனிமை சிதாரில்  மட்டும் இல்லை, டி எம் எஸ் குரலிலும், விஸ்வநாதன் இசையிலும் கண்ணதாசன் வரிகளிலும் என பாடலின் எல்லா இடத்திலும் இருக்கிறது.
டி எம் எஸ் குரலுக்கு ஈடு கொடுத்து இசைக் கருவிகளை வாசித்த மற்ற அனைத்து கலைஞர்களையும் எண்ணிப் பார்க்கிறேன்.

மூன்று வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  நடித்த படம்.
இதை ஆஸ்கர் அவார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாய் நினைவு. கலகலப்புக்கும், நடிப்புக்கும் அவ்வப் போது ஓவர் ஆக்டிங்கும் பஞ்சமில்லாத படம்.
ஆனாலும் திரும்பவும் இதே கெத்தில் ஒரு படத்தை இன்று நம்மால் எடுக்க முடியாது என்பதே உண்மை.

திரைப்படம் : தெய்வ மகன் (1969)
இசை : M.S.விஸ்வநாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடிய குரல்: T.M.சௌந்தரராஜன்

கல்யாணி ராகத்தில் அமைந்த மிகவும் உருக்கமான பாடல்



















கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா 
கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக