S ஜானகி அம்மாவின் இனிமையான குரலில் எந்த ஒரு கருத்துரைக்கும் இடமளிக்காமல் விரைவாக கேட்க செய்யும் பாடல். கேட்டு மகிழ்வோம்.
திரைப்படம்: சுமைதாங்கி (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S ஜானகி
நடிப்பு: ஜெமினி கணேசன், தேவிகா
இயக்கம்: C V ஸ்ரீதர்
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
காதலிப்பவனோ அதில் பேரெடுத்தவனோ
கண்ணிரண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ
ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ
இல்லை ஆசை தீரும் போது நெஞ்சம் மாறுகின்றவனோ
ஹா ஹா ஹா ஹா ஹா
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
சிரித்த முகத்தை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ
அவன் தேக்கு மரத்தைபோல உருண்டு திரண்டு நிற்பானோ
சிரித்த முகத்தை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ
அவன் தேக்கு மரத்தைபோல உருண்டு திரண்டு நிற்பானோ
மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தை தருமோ
இல்லை முன்னழகை பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ
ஹா ஹா ஹா ஹா ஹா
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ
அவன் சாகும் கொட்டலை கூடத்திலே பாடம் கற்றவனோ
சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ
அவன் சாகு கொட்டலை கூடத்திலே பாடம் கற்றவனோ
இளைய கன்னி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ
இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ
ஹா ஹா ஹா ஹா ஹா
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக