பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 நவம்பர், 2014

மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க.. Mazhaikkala megam magarajan vazhga..

தேன் குரலில் வழக்கம் போல K R விஜயாவுக்காக வாணி பாடியிருக்கிறார். இனிமையான V குமார் அவர்களின்  இசையில்.

திரைப் படம்: கஸ்தூரி விஜயம் (1975)
இசை: V குமார்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இயக்கம்: P மாதவன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: வாணி ஜெயராம்











மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
வற்றாத தீபம் சிந்தும் ஒளி போல வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை
தன் கூந்தல் சூடி கொண்டாள் பஞ்சாலி கோதை
சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை
தன் கூந்தல் சூடி கொண்டாள் பஞ்சாலி கோதை
கண்ணான தர்மன் இங்கே
பகைவோரும் இங்கே
பங்காளி உன்னை கண்டால்
பகையாளி எங்கே
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே
அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே
ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே
அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே
காண்டீபம் இங்கே உண்டு
களம் ஒன்று இங்கே உண்டு
கண்ணா உன் வில்லை
எங்கே வைத்தாயோ இன்று
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

இப்போது எழுபத்தைந்து
இன்னும் நூறாண்டு
இளமை நீ காண வேண்டும்
என் வீட்டை ஆண்டு
இப்போது எழுபத்தைந்து
இன்னும் நூறாண்டு
இளமை நீ காண வேண்டும்
என் வீட்டை ஆண்டு
ராஜா உன் உள்ளம்தானே
பொய்யை சொல்லாது
ராஜா உன் உள்ளம்தானே
பொய்யை சொல்லாது
தலைமை நீ ஏற்று கொண்டால்
பஞ்சம் வராது
தலைமை நீ ஏற்று கொண்டால்
பஞ்சம் வராது
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
வற்றாத தீபம் சிந்தும் ஒளி போல வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக