பின்பற்றுபவர்கள்

திங்கள், 10 நவம்பர், 2014

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ Nilavu oru pennaagi

எம் ஜி யாரின் வெளிவராத திரைப் படமான இணைந்த கைகள் என்ற படத்திற்காக பதிவு செயப்பட்ட பாடல் இது. இங்கே உபயோகப் படுத்திக் கொண்டார்கள். இனிமையான பாடல். வாலியின் அழகான கவிதை.


திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
பாடியவர்: டி எம் எஸ்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
தயாரிப்பு, இயக்கம் : எம் ஜி யார்,
நடிப்பு: எம் ஜி யார், லதா, மஞ்சுளா











நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூ போலே
மலருகின்ற இதழோ
மாதுளையின் பூ போலே
மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும்
மயங்குகின்ற விழியோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

புருவம் ஒரு வில்லாக
பார்வை ஒரு கணையாக
புருவம் ஒரு வில்லாக
பார்வை ஒரு கணையாக

பருவம் ஒரு தளமாக
போர் தொடுக்க பிறந்தவளோ

குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின் சங்காக
நீள் கழுதது அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக
நீள் கழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான் மலர்ந்தவளோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ

செந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் பதத்தில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்

மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்

  
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக