பின்பற்றுபவர்கள்

சனி, 8 நவம்பர், 2014

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் mella mella nadanthu vanthathu

வணக்கம். வேலை சம்பந்தமாக மொனாகோ சென்றிருந்ததால் தொடர்பு கொள்ள  இயலவில்லை. சிறிய இடைவெளியாகிவிட்டது.

இனிமையான இசையமைப்பில் மனம் மயக்கும் ஒரு பாடல்.
பிரபுவிற்கு ஏற்ற எஸ் பி பியின் குரல். அதிகம் அறியப்படாத சசிரேகாவின் தேன் குரல். அனைத்து இணைந்து இங்கே...

திரைப் படம்: உரிமை கீதம் (1988)
நடிப்பு: கார்த்திக், பிரபு, ரஞ்சிதா, பல்லவி
இயக்கம்: R V உதயகுமார்
இசை : மனோஜ்-கியான்
குரல்கள்: எஸ் பி பி, B H சசிரேகா












மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கோடி
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு
ஓடும்
அதை கண்டதும் மேகங்கள் மந்திர பூ மழை தூவும்
தூவும்
சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு
ஓடும்
அதை கண்டதும் மேகங்கள் மந்திர பூ மழை தூவும்
தூவும்

நானத்திலே முந்தானை நணைந்தது
நாயகனை எண்ணி எண்ணி
கன்னி இவள் தேகம் சிவந்தது
கை விரல்கள் பின்னிப் பின்னி
வஞ்சியின் அழகை சொல்ல சொல்ல
இங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்
தோட்டம்
அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டு கூட்டம்
கூட்டம்
கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்
தோட்டம்
அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டு கூட்டம்
கூட்டம்
மோகத்திலே நெஞ்சு துடித்தது
மாலை இடும் நாளை எண்ணி
பூவிதழோ தந்தி அடித்தது
புன்னகையின் பேரெழுதி
பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை
இன்பத்திலே மனம் தித்தித்தது

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கோடி
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக