பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

முத்து போலே மஞ்சள் கொத்து போலே முழு நிலவே நீ பிறந்தாய்

கணீர் குரலோன் திரு சீர்காழி S கோவிந்தராஜன் சூலமங்கலத்துடன் இணைந்து புரட்சித் தலைவருக்காக ஒரு தாலாட்டு பாடி இருக்கிறார். என்னமாக கவிதை புனைந்திருக்கிறார் கவிஞர்? ஈடான இசையமைப்பு.


திரைப் படம்: சபாஷ் மாப்பிள்ளை (1961)
இசை: K V மகாதேவன்
நடிப்பு:  M G R, மாலினி
இயக்கம்:  S ராகவன்
பாடல்: மருதகாசி



http://www.divshare.com/download/15784139-bb5





முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது

தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உனை பெற்ற அன்னை பெருமைக் கொள்ளும் நிலையை தந்தது

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே
கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம் காத்திருந்து மகிழுவோமடா

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா

பழைய பாடல் ஒன்று இன்று. அரிய பாடல். என்ன இனிமையான குரல். அன்பு மனைவியும் நல்ல மருமகளுமானவள். இன்றைய பெண்களிடம் எதிர் பார்க்க முடியாத குணாம்சம்.

திரைப் படம்: படித்த மனைவி (1965)
இயக்கம்: N கிருஷ்ணசாமி
குரல்: P சுசீலா
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இசை: K V மகாதேவன்



http://www.divshare.com/download/15774997-10c

ஹோ ஹோ ஹோ ஹோ
ம் ம் ம் ம் ம் ம் ம்
அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே
அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே
அவசரமா அவசரமா

அம்மா போல அடக்கமான
பெண்ணும் வேண்டுமா
உங்கள் அருமையுள்ள
அப்பா போல பையன்
அம்மா போல அடக்கமான
பெண்ணும் வேண்டுமா
உங்கள் அருமையுள்ள
அப்பா போல பையன்

சும்மா சும்மா
உங்களைப் போல்
குறும்புகள் செய்யும்
சும்மா சும்மா
உங்களைப் போல்
குறும்புகள் செய்யும்
துறுதுறுப்பும் துடிப்பும் உள்ள
பிள்ளை வேண்டுமா
அவசரமா அவசரமா

பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனமறிந்து நடக்க வேண்டாமா
பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனமறிந்து நடக்க வேண்டாமா
அத்தை எனக்கு தலை வாரி பூ முடித்தார்கள்
அத்தை எனக்கு தலை வாரி பூ முடித்தார்கள்
அம்மாவைப் போல் வளையல் பூட்டி அனுப்பி வைத்தார்கள்
அவசரமா அவசரமா

தெய்வத்தை நான் இதுவரையில் கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
தெய்வத்தை நான் இதுவரையில் கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
விலைமதியா அன்பு வரம் வாங்கி வந்தேன்

அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே

வியாழன், 22 செப்டம்பர், 2011

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி நான் சரணமடியோ உனது மடியில்

இரு மலையாளக் குரல்கள் தமிழிலில் குயிலாக ஒலித்திருக்கிறது.


திரைப்படம்: சுப முகூர்த்தம் (1983)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், கல்யாணி மேனன்
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: S V சேகர், சுலோசனா
இயக்கம்: ரகு










நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி

நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி

மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
உனது அணைப்பிலே உடல் சிலிர்த்தது
எனது நினைவிலே கடல் எழுந்தது
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மேலாடை தாங்கட்டுமா...கொஞ்சம் நானாடை ஆகட்டுமா

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி

சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
நிலவின் ஒளியிலே துகிலிடு என
நினைவு மயங்கியே அதை எடுத்திட
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
வானத்து நட்சத்திரம்...வந்து காணட்டும் மெத்தை சுகம்

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்

லா லா லலல லலல லலல ல ல ல 

தீம் திர நன திர ந தீர நன தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

மெல்லிசையும் கர்னாடக இசையும் கலந்துகட்டி பாடலை வடித்திருக்கிறார். நல்ல கவிதை வரிகள்.

திரைப் படம்: ஆகாய கங்கை (1982)
பாடல்: மு மேத்தா
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கார்த்திக், சுஹாசினி
இயக்கம்: மனோபாலா



http://www.divshare.com/download/15757570-179





தீம்..
ம்..
திர நன
ம்...ம் ம் ம்
தீம் திர நன திர ந தீர  நன

தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
திர நா...திர நா..
தொடரும்... கதையோ
திர நா...திர நா..
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட...
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ..

முக வாசல் மீது தீபம்
இரு கண்கள் ஆனதோ..
ம்..ம்..ம்.. ம்  ம்  ஆ...ஆ...ஆ..
முக வாசல் மீது தீபம்..
இரு கண்கள் ஆனதோ..
மண வாசல் கோலமே தினம் போடுதோ...
ஆ....ஆ...
துணையாகும் தேவியை கொடி தேடுதோ...
ஆ.....ஆ
புன்னகையோ... பூ மழையோ...
பொன் நடையோ.. தேர் படையோ
வரமோ... வருமோ
நான் வளம் பெற

தீம் திர நன திர நன தீம் திர நா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

திர ந திர நா..
திர நா...திர நா
திர நா.. நா...நா திர நன
தீம் திராஅ நன திர ந தீம் திர நாஆ

ப ரி நி ரி ச
நி த நி ப
க ம ப நி த நி
ப நி த ப

க ம ப நி நி
ஆ ஆ...
ம ப நி நி
ஆ...ஆ
ப நி ச ரி ரி
ஆ ஆ.
நி ச க த த

ப நி ச ரி ரி
நி ரி ச நி ட ச நி ட
க ம ப ம ம க ம ப ம ம
க ம க ம

ஆ....ஆஓ...

நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
ஆ ஆ..ஆ ஆ...ஆ ஆ..ஆ
நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
இனி மை விழி நாட்டியமோ
எனை வாட்டுமோ...
ஏன் தொலைவோ...நீ நிலவோ.
ஆ ஆ.ஆ.....ஆ...ஆ...
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

தீம் திர நன... திர நன
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
தொடரும்... கதையோ
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட..
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

புதன், 21 செப்டம்பர், 2011

ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி


முதல் நான்கு வரிகள் குழந்தையை பார்த்து பாடுவது போல அமைந்து பின்பு வரும் வரிகளில் காதலியை வர்ணிக்கிறார் கவிஞர். ஜெயசந்திரன் குரலில் பாடல் அருமை.

திரைப் படம்: ஒரே முத்தம் (1980)
இயக்கம்: C K|முகிலன்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய்கணேஷ், சுமித்ரா
குரல்: ஜெயசந்திரன்



Free Music - Audio Hosting - Rajaa Ponnu adi






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே
நமக்காகத்தானே நதியோட்டமே
நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதையெழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ

செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
சிங்காரப் பூவை நான் சூட்டவா
கல்யாணத் தேரில் நாம் போகலாம்
கற்பூர தீபம் நான் ஏற்றவா
பொன்னாரமே வெண்மேகமே
பொன்னாரமே வெண்மேகமே
புது வாழ்வு காண்கின்ற என் கீதமே

காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதையெழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ