பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா

பழைய பாடல் ஒன்று இன்று. அரிய பாடல். என்ன இனிமையான குரல். அன்பு மனைவியும் நல்ல மருமகளுமானவள். இன்றைய பெண்களிடம் எதிர் பார்க்க முடியாத குணாம்சம்.

திரைப் படம்: படித்த மனைவி (1965)
இயக்கம்: N கிருஷ்ணசாமி
குரல்: P சுசீலா
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இசை: K V மகாதேவன்http://www.divshare.com/download/15774997-10c

ஹோ ஹோ ஹோ ஹோ
ம் ம் ம் ம் ம் ம் ம்
அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே
அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே
அவசரமா அவசரமா

அம்மா போல அடக்கமான
பெண்ணும் வேண்டுமா
உங்கள் அருமையுள்ள
அப்பா போல பையன்
அம்மா போல அடக்கமான
பெண்ணும் வேண்டுமா
உங்கள் அருமையுள்ள
அப்பா போல பையன்

சும்மா சும்மா
உங்களைப் போல்
குறும்புகள் செய்யும்
சும்மா சும்மா
உங்களைப் போல்
குறும்புகள் செய்யும்
துறுதுறுப்பும் துடிப்பும் உள்ள
பிள்ளை வேண்டுமா
அவசரமா அவசரமா

பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனமறிந்து நடக்க வேண்டாமா
பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனமறிந்து நடக்க வேண்டாமா
அத்தை எனக்கு தலை வாரி பூ முடித்தார்கள்
அத்தை எனக்கு தலை வாரி பூ முடித்தார்கள்
அம்மாவைப் போல் வளையல் பூட்டி அனுப்பி வைத்தார்கள்
அவசரமா அவசரமா

தெய்வத்தை நான் இதுவரையில் கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
தெய்வத்தை நான் இதுவரையில் கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
விலைமதியா அன்பு வரம் வாங்கி வந்தேன்

அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே

3 கருத்துகள்:

அமைதி அப்பா சொன்னது…

மிக மிக நல்லப் பாடல். மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி.

விக்கியுலகம் சொன்னது…

பாட்டு அழகு!

Packirisamy N சொன்னது…

Dear Sir

Thanks for posting the song, I have requested. Sorry for my delayed response. All the songs, you are posting are great. And the lyrics makes it too nice.

Packirisamy N

கருத்துரையிடுக