பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2011

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன்

பெண்ணை கலாட்டா செய்யும் பாடல். இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடலும் கூட. நல்ல பிரபலம் ஆன பாடல் அப்போது. வெளுத்து கட்டி இருக்கிறார் S P B.


திரைப் படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்: S P B
பாடல்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், லதா




அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

கண்ணே வா
கரை ஏறி வா
கண்ணே வா
கரை ஏறி வா
அம்மா தாயே வா
புண்ணியம்

அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

காண கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
காண கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறைக்க
உடல் முழுக்க
அதை கேட்டால் கொடுப்பேன் நானே
வாடி அம்மா சக்கரகட்டி
புது வாசம் வீசும் சந்தனப் பெட்டி
ம் ம் காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரகுட்டி

அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

கண்ணே வா
கரை ஏறி வா
அம்மா தாயே வா
புண்ணியம்

மேனி நோகாமல் மெல்ல தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
மேனி நோகாமல் மெல்ல தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி
அடி வசந்தி
துணை வருமோ இதுபோல் பொருந்தி
காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்ததை பத்தி
அட கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி

அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

கண்ணே வா
கரை ஏறி வா
கண்ணே வா
கரை ஏறி வா
அம்மா தாயே வா
புண்ணியம்

அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக