பின்பற்றுபவர்கள்

புதன், 14 செப்டம்பர், 2011

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்


நல்ல இசையும் கவிதையும் குரல் தெரிவும் இங்கே வெளிச்சத்துக்கு வந்தது.
சிறிது நீண்ட பாடல் ஆனாலும் கேட்க அலுக்கவில்லை

திரைப் படம்: சட்டம் ஒரு இருட்டறை (1981)
நடிப்பு: விஜயகாந்த், பூர்ணிமா தேவி
இயக்கம்: S C சந்திர சேகர்
இசை: சங்கர் கணேஷ்
குரல்கள்: சுரேந்திரன், ஷோபா சந்திரசேகர் (S ஜானகி அல்லவா?)
தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஹோ    நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
ஹோ  நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட
இளம் பெண்ணாலும் பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓட வேண்டும்
தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆ ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ளம் பொன் வாசல் தேடி
இசை பாட்டாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊற வேண்டும் சேர வேண்டும்
தனிமையிலே ஹா
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி
என்னாளும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இன்னேரம்
பாட வேண்டும் கூட வேண்டும்
தனிமையிலே ஆ ஆ
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ
இளமையின் நினைவுகள் பறந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ
லலலா ல லலலல் ஆ ஆ லலல லலல் லல்ல லா ஆ

2 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

எனக்குப் பிடித்த பல பாடல்கள் உங்களால் எனக்குக் கிடைத்தன. உங்களின் சேவைக்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கள். சில நல்ல பாடல்களை நான் தங்களுக்கு அனுப்பலாமா? உங்கள் மூலம் அவை பலரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.

கிணற்றுத் தவளை சொன்னது…

நன்றி கணேஷ், என்ன பாடல் எந்த திரைப்படமென்று சொல்லுங்கள். என்னிடம் அந்தப் பாடல் இல்லை என்றால் உங்களிடம் கேட்டு வாங்கி வெளியிடுகிறேன். என்னிடம் பாடல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பாடலை அனுப்பி சிரமப் படவேண்டாமே. புதிய பாடல்கள் இதில் இடம் பெறாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். ஏனென்றால் பெரும்பாலும் அரிதான பழைய பாடல்களைத்தான் நான் இதில் முயற்சிக்கிறேன்.

Contact asoktamil2001@yahoo.com

கருத்துரையிடுக