பின்பற்றுபவர்கள்

சனி, 17 செப்டம்பர், 2011

வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ வைகை பெருகி வருமோ

நல்ல வளமான இசையுடன் கூடிய பாடல். பின்னனியில் ஆண் குரல் மிக இனிமையாக இசைக்கிறது.

திரைப் படம்: மறக்க முடியுமா (1966)
குரல்கள்: K J Y, P சுசீலா
பாடல்: சுரதா
நடிப்பு: S S ராஜேந்திரன், தேவிகா
இசை: T K ராமமூர்த்தி
இயக்கம்: முரசொலி மாறன்



http://www.divshare.com/download/15712893-c91


வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ
வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆசை அரும்பு மலராகி, நெஞ்சில்
ஆடும் நினைவு கனியாகி
மடி மீதிலே விளையாடவே
கொடி போலவே உறவாடவே
எனையே தேடி...
ஆ..ஆ..ஆ..ஆ..

வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ

வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேது
ஹாஹா ஹாஹா ஹா ஹா
வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேது

குயில் கூவுமோ மழை நாளிலே
கயல் நீந்துமோ சுடும் நீரிலே
எனையே தேடி...
ஆ..ஆ..ஆ..ஆ..

வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ
வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள
பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை
தினமும் தங்கள் பதிவுக்குள் வந்து போக ஆசை
இசை ஞானத்தில் கடல் சுறா வான நீங்கள்
ஏன் நேர் எதிர்மாறாய் கிணற்றுத் தவளை என
வைத்துள்ளீர்கள் என ஆச்சரியப் படுகிறேன்
வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் சொன்னது…

தேடினாலும் கிடைக்காதப் பாடல்கள் உங்களால் மட்டுமே கிடைக்கிறது எனக்கு நன்றிகள்

கருத்துரையிடுக