பின்பற்றுபவர்கள்

சனி, 10 செப்டம்பர், 2011

கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு


குரலினிமையும் இசையமைப்பும் அற்புதம். மனதைத் தொடும் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: மரகதம் (1959)
குரல்கள்: T M S, ராதா ஜெயலக்ஷ்மி 
இசை: M S சுப்பையா நாயுடு
இயக்கம்: ஸ்ரீராமுலு நாயுடு
நடிப்பு: சிவாஜி, பத்மினி
http://www.divshare.com/download/15688078-de9
கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
அது காவியம் ஆயிரம் கூறும் ! 

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
அது காவியம் ஆயிரம் கூறும் 
கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 

எண்ணத்திலே எழில் வண்ணத்திலே 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எண்ணத்திலே எழில் வண்ணத்திலே 
மின்னித் திரிகின்ற‌ வெண்ணில‌வில் 
உன்னை தின‌ம் தின‌ம் காண்கின்றேன் 
உன்னை தின‌ம் தின‌ம் காண்கின்றேன் 
அந்த‌ உண‌ர்ச்சியில் உல‌கினை ம‌ற‌ந்தேன்
 
கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
அது காவியம் ஆயிரம் கூறும் 
கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 

இன்ப‌த்தின் எல்லையில் கூடுக‌ட்டி 
இன்ப‌த்தின் எல்லையில் கூடுக‌ட்டி 
அதில் இன்னிசை பாடும் ப‌ற‌வைக‌ள் நாம் 
அதில் இன்னிசை பாடும் ப‌ற‌வைக‌ள் நாம் 
அன்பினில் பொங்கும் க‌ட‌ல் போலே 
அன்பினில் பொங்கும் க‌ட‌ல் போலே 
ஆசை அலைகளை வீசிடும் க‌லைய‌முதே 
கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 

ஓடும் அருவியாய் நான் இருக்க 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஓடும் அருவியாய் நான் இருக்க 
அதில் ஓடிடும் மீன் போல் துள்ளி வ‌ந்தாய் 
அதில் ஓடிடும் மீன் போல் துள்ளி வ‌ந்தாய் 
பாடும் குயிலென‌ நானிருக்க‌ 
பாடும் குயிலென‌ நானிருக்க‌ 
அங்கு ஆடும் ம‌யிலென‌ நீயும் வ‌ந்தாய் 

கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
அது காவியம் ஆயிரம் கூறும் ! 
கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு


3 கருத்துகள்:

கருத்துரையிடுக