பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 செப்டம்பர், 2011

சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே

மீண்டும் S P Bயின் குரல் வளம் பாடலை தூக்கி நிறுத்துகிறது.

திரைப் படம்: சந்தனக் காற்று (1990)
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: மணிவண்ணன்
நடிப்பு: விஜயகாந்த், கௌதமி



http://www.divshare.com/download/15785077-4f4

சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே

வானத்து மேலே மேகப் பறவை
ஊர்வலம் போகின்றது
வருகின்ற மேகம் சூரியன் முகத்தில்
ஓவியம் வரைகின்றது
மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு
தூக்கம் கலைகிறது
ஓ ஓ மூலை முடுக்கில் ஓலை இடுக்கில்
சூரியன் நுழைகிறது
மண்ணிலெல்லாம் ஓ ஓ பொன்னொளியே ஓ ஓ
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே

ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து
நான் இங்கே வந்தேனே
வாவென்று என்னை பூக்களின் கூட்டம்
வாழ்த்திடக் கண்டேனே
நாட்டை உயர்த்தி நாமும் உயர
சேவைகள் செய்வோமே
ஓ ஓ நாளையப் பொழுது
நமக்கென விடியும்
நம்பிக்கை கொள்வோமே
பிள்ளைகளே ஓ ஓ
முல்லைகளே ஓ ஓ

சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண் பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே
ஓ ஓ பூமகள் மடி மேலே
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே

1 கருத்து:

vishal சொன்னது…

காலை நேரத்திற்கு ஏற்ற ரம்மியமான பாடல்

கருத்துரையிடுக