பின்பற்றுபவர்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2011

முதல் முத்த மோகம் இது என்ன மாயம் காணாத பேரின்பம்


இனிமையான இசையமைப்பில் இனிமையான குரல்களுடன் ஒரு நல்ல இனிமையான பாடல். மென்மையான பின்னனி இசையும் குரல்களும் நெஞ்சை அள்ளுகின்றது.

திரைப் படம்: புதிர் (1986)
குரல்கள்: K J Y, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: முரளி, சந்தியா
பாடல்: மு மேத்தா

முதல் முத்த மோகம் இது என்ன மாயம் 
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது.. சுவை..சுகம்..நான் கண்டேன்
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும் 
தேவை இந்த பாவை என்று ஆசை தேடுதே
பூவை சூடும் பூவை மீது மாலை போடுதே
மோதல் காதலானதே ராகம் தாளம் சேருதே
பூந்தேரோடும் பாதையில் மான் நீராடுதோ
நான் காணாத மோகமே ஏன் போராடுதோ
தேகம் எங்கும் தாகம் இன்பத் தேனில் ஊறும் வேகம்.... சுகமே
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
கண்ணில் நாணும் மின்னல் உந்தன் கையில் நாணுதே
கைகள் தீண்டும்போது தேகம் பெண்மை காணுதே
காதல் ராஜகோபுரம் காண வேண்டும் சீக்கிரம்
நீ தூங்காத ராவிலே நான் தாலாட்டுவேன்
நீ தாலாட்டும் பாடலை நான் பாராட்டுவேன்
கீதம் பாடும் வானம்பாடி நானும் நீயும் ஆனோம்... புதுமை

முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது..சுவை..சுகம்..நான் கண்டேன்
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக