பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்


திரு பக்கிரிசாமி அவர்களின் விருப்பப் பாடல். அருமையான பாடல். ஏழை தாய் தந்தையரின் தாலாட்டு.

திரைப் படம்: பெத்த மனம் பித்து (1973)
இசை: V குமார்
பாடல்: பூவை செங்குட்டுவன்
நடிப்பு: முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்http://www.divshare.com/download/15742580-a2d


காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
பொன்னூஞ்சல் இல்லை 
பூமெத்தை இல்லை 
நீ வந்த வேளையிலே 
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் 
பூமெத்தை தானே தந்தை மனம் 
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் 
பூமெத்தை தானே தந்தை மனம் 
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம் 
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா 
மஞ்சமடா… மஞ்சமடா ! 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
செல்ல‌மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள் 
ஏழையுடன் வந்தாளடா 
ஸ்ரீராம‌ன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு 
பெருமைகள் வேறேத‌டா 
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌ 
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌ 
த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா 
தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌
ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌ 
பார்வ‌தியும் பெண்தானடா 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
த‌னிம‌ர‌மாய் நின்ற‌வ‌னை
த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள் 
சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா 
கொடியுண்டு மரமுண்டு
குழ‌ந்தையெனும் க‌னியுண்டு 
குறையென்ன‌ க‌ண்டேன‌டா 
உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை
நான் தீர்க்கும் முன்னாலே 
உன்க‌வலை கொண்டேன‌டா 
க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌ ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌ 
க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா 
காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக