பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஒரு தரம், ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்


இளமையான இசையும் இளமையான குரல்களும் அருமையான பாடலாய் ஒலிக்கின்றது.

திரைப் படம்: சுமதி என் சுந்தரி(1971)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: C V ராஜேந்திரன்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/15712318-487





http://www.divshare.com/download/15712386-33d


ஒரு தரம், ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்

ஒரு தரம், ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்

இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண்மறைவாய்
மூடி வைத்தால் சுவை இருக்கும்

இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால்
காலமெல்லாம் சுவை இருக்கும்

ஒரு தரம், ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்

வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டு கொள்ள தடை செய்வாளோ
தத்தி தத்தி மெல்ல செல்வாளோ

தங்க வளைத் தளிர் கையோடு
வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்து பந்தல் நகை தன்னோடு
மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு

சித்திரத்தின் முகம் கண்டேனே
செம்பவளம் நிறம் என்றேனே
உண்ண உண்ண இதழ் செந்தேனே
உன்னிடத்தில் என்னை தந்தேனே

இல்லை எனும் இடை தள்ளாட
மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்ல சொல்ல தொட வந்தாயோ
என்ன என்ன சுகம் கண்டாயோ

ஒரு தரம், ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்
ஒரு தரம்,
ஒரே தரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக